மணிகளால் ஆன முடி(crown) - பொதுவான கைவினை - அறுசுவை கைவினை - பக்கம் 3


மணிகளால் ஆன முடி(crown)

திங்கள், 09/03/2009 - 13:39
Difficulty level : Medium
4.8
5 votes
Your rating: None

 

  • முத்து - 6 மி.மீ அளவிலான முத்துக்கள்
  • கம்பி
  • குரடு

 

மணி முடி செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முடியின் அளவை விட 6 செ.மீ அதிகமாக ஒரு துண்டும், இரண்டாவது துண்டு அதுபோல் 2 மடங்கு வருமாறும் கம்பியை வெட்டிக் கொள்ளவும்.

இரண்டு கம்பிகளையும் ஒன்றாகப் பிடித்து ஒரு முத்தினுள் நுழைத்துக் கொள்ளவும். கம்பிகள் இரண்டையும் முத்தைச் சுற்றி வளைத்து விடவும்.

சிறிய கம்பியில் 6 முத்துக்களும், நீளமான கம்பியில் 9 முத்துக்களும் கோர்த்துக் கொள்ளவும்

முத்துக்களை நெருக்கமாகப் பிடித்துக் கொண்டு நீளமான கம்பியால் சிறிய கம்பியை இறுக்கமாக 2 சுற்றுச் சுற்றி விடவும்.

இதேப்போல் தொடர்ந்து தேவையான அளவு நீளம் வரும் வரை முத்துக்களைக் கோர்த்துக் கட்டவும்.

கடைசி முறை கம்பியைச் சுற்றியதும் ஆரம்பத்தில் செய்தது போல் இரண்டு கம்பிகளையும் சேர்த்து ஒரு முத்தினுள் நுழைக்கவும்.

தொடங்குகிற போது வளைத்துவிட்ட கம்பி வளையத்தினூடாகச் செலுத்தி ஒற்றை முத்தைச் சுற்றி வளைத்து விடவும்.

மேலதிகமான கம்பித் துண்டுகளை வெட்டிவிட்டு வளைவுகளைச் சீர்செய்துவிடவும்.

தலைக்கு அணிவிக்கும் போது ஒற்றை மணிகள் வரும் இடத்தைப் பின் புறம் வருமாறு வைக்க வேண்டும். வளைவு இடைவெளிகளில் ஹேர்பின் கொண்டு சொருகி விட வேண்டும். இங்கு பயன்படுத்தியுள்ளவை பல்கோண அமைப்புள்ள, மல்டிகலர்ட் முத்துக்கள்.

இந்த அழகிய மணிகளால் ஆன முடியை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. செபா அவர்கள். 73 வயதாகும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. கைவேலைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இந்த முடி 1969 ஆம் ஆண்டு தனது மகளின் முதல் நன்மைக்காகச் செய்தது. அதை இப்போது நினைவுப்படுத்தி நமக்காக செய்து அனுப்பியுள்ளார்
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..நன்றி இமா !!

பதில்களுக்கு நன்றி இமா.. அம்மா இஸ் அமேசிங் !!!..

அம்மா நல்லபடியா சிகிச்சை முடிஞ்சு வரதுக்கு பிரார்த்தனைகள்..

(இன்னுமொரு சந்தேகம்.. உங்க சொந்த பதிவுகளுக்கு proof reading பண்ணறதுக்கு ஆள் தேடிட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்.. :) )

இதுக்கு மேல இங்க அரட்டை வேண்டாம்.. செபா கோச்சுக்க போறாங்க :)
(செபா கோச்சுக்காதீங்கோ - இந்த இமா தான் எல்லாத்துக்கும் காரணம் :) )

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

செபா ஆன்ரி

செபா ஆன்ரி, முதலில் என்னை மன்னிக்கவும், இன்றுதான் தற்செயலாக இத் தலைப்பை உள்ளே பார்த்தேன், எல்லாம் தெரிந்துகொண்டேன். நானும் நீங்கள் சின்னப்பிள்ளை என்றுதான் நினைத்துக் கதைத்துக்கொண்டுவந்தேன். எங்கள் அம்மாவை விட நீங்கள் வயதில் மூத்தவர், இப்போதான் அறிந்து, உங்களை இவ்வளவு காலமும் பெயர் சொல்லி அழைத்துவந்தேனே என மனவருத்தமாக இருக்கு.

மிக அழகாக செய்து காட்டியிருக்கிறீங்கள். இப்போ உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் பயன்படும். இன்னும் வேறு கைவண்ணங்களில் முடிந்தால் செய்து அனுப்புங்கோ. எமக்குப் பயன்படும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மண்டை குழம்பிப்போச்சு:)

மண்டை குழம்பிப்போச்சு:)
இமா, இமா... இப்பத்தான் முழுவதும் படித்தேன் மண்டையே குழம்பிப்போச்சு. இமா, உண்மையில் செபா ஆண்ரி உங்கள் அம்மாவோ? படத்தில் வயதோடு :) போட்டிருப்பது உங்கள் படமோ? என்னவெல்லாம் புதுமைகள் இங்கே நடக்கிறதே...... இதைச் சாட்டாக வைத்து:) சந்தனா தான் ரொம்பச் சின்னப் பெண்ணாகிட்டார்:)....

என்னதான் நடக்கும்.. நடக்கட்டுமே.... இருட்டினில் யாவும் மறையட்டுமே.... தன்னாலே வெளிவரும் தயங்காதே... ஒரு தலைவர் இருக்கிறான் கலங்காதே.... எனக்கு நானே பாடிக்கொண்டு வோக் போகிறேன்...:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

செபா அம்மா

கிரீடம் ரொம்ப அழகாக இருக்கிறது...
உங்கள் மகள் இமாவும் அழகாக இருக்கிறார்....

நன்றி அம்மா

crown செய்தாச்சு...
இவ்வளவு எளிமையாக அழாகாக செய்ய முடிகிறதே...'
என் மகனும் செய்யும் பொது எமக்கு உதவினார்...
மகள்(ஹெப்சி) அசந்து விட்டாள்...மீண்டும் மீண்டும் நீங்களா செய்தது...என்றாள்...
அவளுக்கு இப்போது boycut செய்திருப்பதால் தலையில் நிற்க கஷ்டம்...
இன்னும் நிறைய செய்யுங்கள்....

இமா

இன்னும் (புகைப்)படம் எடுக்கவில்லை...எடுத்ததும் அனுப்புகிறேன்...

மணிகளால் ஆன முடி(crown)

இந்த செய்முறையை பார்த்து திருமதி. தேன்மொழி அவர்கள் செய்த மணிகளால் ஆன முடியின் படம் picture

முடி அருமை தேன்

ஆஹா, அருமை. :) அழகாகச் செய்திருக்கிறீர்கள் தேன்மொழி. என்ன, ஹெப்சி இல்லாமல் முடியை மட்டும் அனுப்பிவிட்டீர்கள். :) மிக்க நன்றி. அம்மா எழுந்ததும் சொல்கிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

தேன்,

மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் செய்துள்ள கிரீடம்.
செய்து பார்த்ததற்கு எனது நன்றிகள்.
அன்புடன்,
செபா.

இமா, செபா அம்மா

பாராட்டுக்களுக்கு நன்றி...
படத்தை நான் இப்போதுதான் பார்த்தேன்..
படத்தை அனுப்பிவிட்டு எல்லோரும் நிறைய நாட்கள் காத்திருந்தது போல் தெரிந்ததால் நான் இன்னும் நாட்களாகும் என்று நினைத்தேன்...நன்றி அட்மின்...நான் அனுப்பிய படமும் நீங்கள் கேட்ட format ல் இருக்கவில்லையே...எனக்கு என் கிரீடம் படம் ரொம்ப விரைவாக வெளிவந்ததாக தோன்றுகிறது...மிக்க நன்றி...