மணிகளால் ஆன முடி(crown) - பொதுவான கைவினை - அறுசுவை கைவினை - பக்கம் 4


மணிகளால் ஆன முடி(crown)

திங்கள், 09/03/2009 - 13:39
Difficulty level : Medium
4.8
5 votes
Your rating: None

 

  • முத்து - 6 மி.மீ அளவிலான முத்துக்கள்
  • கம்பி
  • குரடு

 

மணி முடி செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முடியின் அளவை விட 6 செ.மீ அதிகமாக ஒரு துண்டும், இரண்டாவது துண்டு அதுபோல் 2 மடங்கு வருமாறும் கம்பியை வெட்டிக் கொள்ளவும்.

இரண்டு கம்பிகளையும் ஒன்றாகப் பிடித்து ஒரு முத்தினுள் நுழைத்துக் கொள்ளவும். கம்பிகள் இரண்டையும் முத்தைச் சுற்றி வளைத்து விடவும்.

சிறிய கம்பியில் 6 முத்துக்களும், நீளமான கம்பியில் 9 முத்துக்களும் கோர்த்துக் கொள்ளவும்

முத்துக்களை நெருக்கமாகப் பிடித்துக் கொண்டு நீளமான கம்பியால் சிறிய கம்பியை இறுக்கமாக 2 சுற்றுச் சுற்றி விடவும்.

இதேப்போல் தொடர்ந்து தேவையான அளவு நீளம் வரும் வரை முத்துக்களைக் கோர்த்துக் கட்டவும்.

கடைசி முறை கம்பியைச் சுற்றியதும் ஆரம்பத்தில் செய்தது போல் இரண்டு கம்பிகளையும் சேர்த்து ஒரு முத்தினுள் நுழைக்கவும்.

தொடங்குகிற போது வளைத்துவிட்ட கம்பி வளையத்தினூடாகச் செலுத்தி ஒற்றை முத்தைச் சுற்றி வளைத்து விடவும்.

மேலதிகமான கம்பித் துண்டுகளை வெட்டிவிட்டு வளைவுகளைச் சீர்செய்துவிடவும்.

தலைக்கு அணிவிக்கும் போது ஒற்றை மணிகள் வரும் இடத்தைப் பின் புறம் வருமாறு வைக்க வேண்டும். வளைவு இடைவெளிகளில் ஹேர்பின் கொண்டு சொருகி விட வேண்டும். இங்கு பயன்படுத்தியுள்ளவை பல்கோண அமைப்புள்ள, மல்டிகலர்ட் முத்துக்கள்.

இந்த அழகிய மணிகளால் ஆன முடியை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. செபா அவர்கள். 73 வயதாகும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. கைவேலைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இந்த முடி 1969 ஆம் ஆண்டு தனது மகளின் முதல் நன்மைக்காகச் செய்தது. அதை இப்போது நினைவுப்படுத்தி நமக்காக செய்து அனுப்பியுள்ளார்
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..seba aunty...

superb..