வெண்டைக்காய் தயிர்க்கறி

தேதி: March 9, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

வெண்டைக்காய் - அரை கிலோ
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்
தயிர் - 1- 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு


 

வெண்டைகாயை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். மிளகாய் பொடியாக கட் செய்யவும், தக்காளியை கட் செய்து கொள்ளவும்.
முதலில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை உப்பு போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய் சிவக்க வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும், தக்காளி சேர்க்கவும். கடைசியில் தயிர் சேர்த்து ,உப்பு, மல்லி இலை தூவி பிரட்டி இறக்கவும்.
சுவையான வெண்டைகாய் தயிர்க்கறி ரெடி. இதனை சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியா அவர்களுக்கு இந்த குறிப்பை செய்தேன். தயிர் சாதத்துடன் மிகவும் அருமையாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

மிக்க மகிழ்ச்சி.என் குறிப்பு செய்த்து பார்த்து பின்னூட்டம் சொலவதற்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வெண்டைக்காய் தயிர் கறி ரொம்ப நல்ல டேஸ்ட். எங்க வீட்டு குட்டி கொஞ்சம் டேஸ்ட் பண்ணிச்சு கீரை சாதத்துடன். எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

சிம்பிள் டிஷ்பா.செய்து பார்த்தமைக்கு மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியாக்கா வெண்டைக்காய் தயிர்க்கறி நேற்று செய்தேன் ரொம்ப நன்றாக இருந்தது. மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மிக்க மகிழ்ச்சி. பின்னூட்டத்திற்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.