கறி மசாலா பேஸ்ட்

தேதி: March 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
ஒயிட் வினிகர் - 100 -150 மில்லி
எண்ணெய் - 250 மில்லி (1 கப்)
மல்லி விதை - 50 கிராம்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தண்ணீர் - 50 - 75 மில்லி


 

முதலில் மல்லி, சீரகம், சோம்பு, வெந்தயம், கறிவேப்பிலை லேசாக வெதுப்பி பொடி செய்து கொள்ளவும்.
இந்த பொடியுடன், மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், வினிகர், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
ஒரு பேனில் 200 மில்லி எண்ணெய் காயவைத்து தயார் செய்த கறி மசாலா பேஸ்ட்டை போட்டு 10 நிமிடம் கிளறவும். தண்ணீர் வற்றி எண்ணெய் தெளிந்து மேலே வரும். இறக்கி ஆற வைக்கவும்.
சுத்தம் செய்த கண்ணாடி ஜாரில் காய்ந்த ஸ்பூனால் எடுத்து போட்டு வைக்கவும். மீதி உள்ள 50 மில்லி எண்ணெயை காய வைத்து மசாலா உள்ள ஜாரில் விடவும். இது விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க உதவும். இப்படி செய்வதால் பூஞ்சனம் வைக்காது. ஒரு துளி கூட ஜாரில், ஸ்பூனில் தண்ணீர் படாதவாறு உபயோகிக்க வேண்டும். விருப்பப்பட்டால் உப்பு சேர்க்கலாம்.
சுலபமாக கறி மசாலா பேஸ்ட் வீட்டிலேயே ரெடி. இதனை குழம்பு, குருமா,கறி,மசாலா வகைகளுக்கு உபயோகிக்கலாம்.


தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்கலாம். அவசரத்திற்கு மொத்தமாக போடுவதற்கு வசதியாக இருக்கும். ஒரு மாறுதலுக்கு இப்படி செய்து வைத்து உபயோகிக்கலாம். இது பேச்சுலர்ஸ்க்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

how to make fish fry masal podi.plz tell me.