கறி பவுடர்

தேதி: March 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மல்லி விதை - 50 கிராம்
சீரகம் - 3 -4 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1-2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
சில்லி பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் (விரும்பினால்)


 

மல்லி, சீரகம், சோம்பு, வெந்தயம் நன்கு மணம் வரும்வரை வறுத்து ஆற வைக்கவும். பொடி செய்து கொள்ளவும்.
அதனுடன் சில்லி பவுடர், மஞ்சள் பவுடர், உப்பு சேர்த்து மிக்ஸியில் சுற்றி கொள்ளவும்.
இதனை காற்று புகாதவாறு ஒரு ஜாரில் போட்டு வைக்கவும்.
வீட்டில் சுலபமாக தயாரித்த கறி பவுடர் ரெடி. இதனை நாம் பொரியல், வறுவல், குழம்பு, குருமா, கறி,மசாலா வகைகளுக்கு உபயோகிக்கலாம்.


காரம் தேவைப்படுவோர், சமைக்கும் போது சில்லி பவுடர் அதிகம் சேர்த்து கொள்ளலாம். நாம் உபயோகிப்பதை பொறுத்து 2 வாரம் - 1 மாதம் வரை உபயோகிக்கலாம். அதிகம் மசாலா பொருட்கள் உபயோகிப்பவர்கள் 2 மடங்காக பொடி செய்து வைத்து உபயோகிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்களின் இந்த கறி பவுடர் சேர்த்துதான் இப்பொழுது எல்லா பொரியலும் செய்வது.வாழைக்காய்,பீட்ரூட்,சேனைக்கிழங்கு எல்லாவற்றிக்குமே இந்த கறி பவுடர் தான். என் மகள் காய்கறியே சாப்பிட மாட்டாள் இந்த பவுடர் போட்டு செய்தால் விரும்பி சாப்பிடுகிறாள்.ரொம்ப நன்றிங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

செய்துட்டேன்... இன்னும் சமையலில் சேர்க்கல. வாசம் நல்லா இருக்கு. மிக்க நன்றி ஆசியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்தமைக்கு நன்றி.சேர்த்து சமைத்து பார்த்து சொல்லுங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஆசியாக்கா,
நான் உங்கள் குறிப்பில் இருந்தது கறி பவுடர் நேற்று செய்தேன் நல்ல இருந்தது.
வாசனை சூப்பர்..

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.