ஈஸி கத்தரிக்காய் பச்சடி

தேதி: March 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 2 (பொடி கட்டங்களாக நறுக்கியது)
வெங்காயம் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வெந்தயத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெல்லத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
புளி - 1/2 கப் (கட்டியான புளிக்கரைசல்)
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

முதலில் கத்திரிக்காயை குறைவான தண்ணீர் வைத்து மிதமான தீயில் குழைய வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சைமிளகாய், வெங்காயம் இவற்றை நன்றாக வதக்கவும் நன்றாக வதங்கியதும் கத்தரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், வெந்தயத்தூள் எல்லாமும் சேர்த்து கிளறிவிட்டு புளிக்கரைசல் தேவையான உப்பு போட்டு நன்றாக கொதிக்கவைக்கவும்.
அதுவும் மிதமான தீயில் வேகவிடவும். எல்லாம் சேர்ந்து வரும் போது வெல்லத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் மகா நேற்று உங்கள் ஈசி கத்தரிக்காய் பச்சடி சமைத்தேன் சுவையாக இருந்தது. நன்றி உங்களுக்கு, அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.