கிட்ஸ் க்ரிஸ்பி க்ரீன் பீன்ஸ்

தேதி: March 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

இந்த மொறு மொறு பீன்ஸ் குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

 

பீன்ஸ் – அரைக் கிலோ
மைதா மாவு – ஒரு கப் + அரை கப்
ப்ரட் க்ரம்ஸ் – ஒரு கப்
பார்மஜான் சீஸ் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு


 

பீன்ஸை அடி மற்றும் நுனி பகுதியை நறுக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் சிறிது உப்பு போட்டு நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸை போட்டு 2 - 3 நிமிடம் வேக விடவும்.
அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீருடன் சில ஐஸ் கட்டிகளை போட்டு எடுத்துக் கொள்ளவும். அதில் வேக வைத்த பீன்ஸை போடவும். இதுப் போல் குளிர்ந்த தண்ணீரில் போடுவதால் பீன்ஸை மேலும் வேகாமல் பார்த்துக் கொள்ளவும் மற்றும் பீன்ஸின் நிறம் மாறாமல் இருக்கவும் உதவுகிறது.
5 நிமிடம் கழித்து பீன்ஸை தண்ணீரிலிருந்து எடுத்து நன்றாக வடிக்கட்டவும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவை போட்டு 2 கப் தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். (விரும்பினால் மைதா மாவிற்கு பதில் முட்டை உபயோகிக்கலாம்). ஒரு தட்டில் ப்ரட் க்ரம்ஸுடன் பார்மஜான் சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு பீன்ஸை எடுத்து மைதா மாவில் (தனியாக கொடுத்துள்ள அரை கப் மாவு) போட்டு பிரட்டி விட்டு அதனை கரைத்து வைத்திருக்கும் மைதா மாவில் போட்டு எடுக்கவும்.
மைதா மாவில் தோய்த்து எடுத்த பீன்ஸை ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதைப் போல் எல்லா பீன்ஸையும் ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
அந்த தட்டை ப்ரிட்ஜில்(freezer) 1 - 2 மணி நேரம் வைக்கவும். இப்படி ப்ரிட்ஜில் வைப்பதால் ப்ரட் க்ரம்ஸ் எண்ணெயில் பொரிக்கும் போது உதிராமல் இருக்கும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து பின்னர் பீன்ஸை எடுத்து பொரிக்கவும்.
சுவையான கிட்ஸ் க்ரிஸ்பி க்ரீன் பீன்ஸ் ரெடி. இதனை சாஸுடன் அல்லது ப்ளு சீஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதனை குறைந்தது 2 – 3 நாள் முன்னதாகவே செய்து வைத்து பின் விருந்தினர் வரும் பொழுது ப்ரிஜில்(Freezer) இருந்து எடுத்து பொரிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்புள்ள கீதா,
சிறுவருக்கான சத்துள்ள சுவையான உணவே தான். நிச்சயம் விரும்பி உண்பார்கள். வாழ்த்துக்கள்

நல்ல ரெசிப்பி குழந்தைகள் கண்டிப்பா விரும்புவார்கள். அதேசமயம் பீன்ஸ் நல்ல சத்தான உணவும் கூட. என் மகளுக்கு செய்து பார்க்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

புதிய ரெசிப்பியாக இருக்கே.செய்முறை அருமையாக இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அனைவருக்கும் மிகவும் நன்றி.
கண்டிப்பாக செய்து பாருங்கள். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இங்கு உள்ள TGI Fridays என்ற ரெஸ்டரெண்டில் இந்த பின்ஸ் ப்ரைஸ்(Bufalo wings) போல் மிகவும் பேமஸ்.
ஆஸியா அக்கா,
உங்கள் Buffalo wings மிகவும் அருமை..(அதில் பின்னுட்டம் கொடுக்க முடியவில்லை…அருசுவை மிகவும் ஸ்லோவாக இருக்கு…)செய்து விட்டு கண்டிப்பால சொல்கிறேன்..

அன்புடன்,
கீதா ஆச்சல்

புதுசா இருக்கு இந்த ரெசிபி.நிச்சயமா கிட்ஸ்களுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்கன்னு சந்தேகமேயில்லை கீதா.இன்னும் நிறைய சிம்பிளான ரெசிபி குடுக்க வாழ்த்துக்கள்!!

மிகவும் நன்றி மேனகா.
அன்புடன்,
கீதா ஆச்சல்