இறால் கருவாட்டுச் சம்பல்

தேதி: March 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

இறால் கருவாடு - 200 கிராம்
செத்தல் மிளகாய் - 10
சோயா சாஸ் - 50 மி.லி
எண்ணெய் - 75 மி.லி
சீனி - ஒரு தேக்கரண்டி


 

கருவாட்டு சம்பல் செய்ய தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகாயை வறுத்துக் கொண்டு ப்ளெண்டரில் போட்டு உடைத்து தூளாக்கிக் கொள்ளவும்.
இறால் கருவாட்டையும் லேசாக வறுத்து மாவாக அரைக்காமல் பொடியாக்கிக் கொள்ளவும்.
பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் பொடியை போடவும்.
மிளகாய் சிறிது பொரிந்ததும் சோயா சாஸை ஊற்றிக் கலக்கவும்.
சூடாகியதும் இறால் தூளைக் கொட்டிக் கிளறவும். எல்லாம் ஒன்றாக நன்கு சேர்ந்ததும் அதில் சீனியைக் கொட்டி பிரட்டி விட்டு இறக்கவும்.
சுவையான இறால் கருவாட்டுச் சம்பல் தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பராக இருக்குமென்பதில் சந்தேகமே இலை..ஆனால் இவ்வளவு மிளகாய் போடுவீங்களா அதிரா..அம்மா நான் அதில் கால் பாகம் போட மாட்டேன்

அதிரா இறால் கருவாட்டு சம்பல் படம் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு , தளி நானும் தான் இத்தனை மிளகாய் போட மாட்டேன்.

ஜலீலா

Jaleelakamal

இறால் கருவாட்டு சம்பல்..அடடா அதிரா,காராசாரமாக உடனே செய்யவேண்டும் போல் உள்ளது.மாசி,ஷிரிம்ப்ஸ்(கூனி)போன்றவற்றில் சம்பல் செய்வோம்.இது தேங்காய் சேர்க்காமல்,சோயா சாஸ் சேர்த்து செய்தால் கண்டிப்பாக வித்தியாசமாகத்தான் இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

வெங்காயம்,தேங்காய் சேர்த்து தான் நானும் செய்திருக்கிறேன்,இறுதியாக சீனி சேர்ப்பதால் இவ்வளவு காரம் போட்டாலும் ஒன்றும் தெரியாது.அந்த காரத்தை சீனி எடுத்துவிடும்.இது நீங்கள் எதற்கு சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிடுவீங்க.அருமையாக செய்திருக்கீங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா இறால் சம்பல் செம்ம அருமை..இன்று நெடுநாளுக்கு பிறகு கருவாடு மேல் ஆசை வர உங்க குறிப்பும்..உடனே செய்துவிட்டேன்..அட்டஹாசம் போங்க.

அதிரா இது நியாயமா?? நானே வெஜிடேரியனுக்கு மாறியாச்சு இப்ப இப்படி நீங்க என்னை கைவிடலாமா??

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இரால் கருவாடு எங்க வாங்கறது?

johnsirani

ஜான்சி இரால் கருவாடு ஏஷியன் கடைகளில கிடைக்கும் . அங்க லயன்ஸ் மார்கெட்ல இருக்கும் நினக்கிறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தளிகா, வழமையாகவே நாங்கள் அதிகம் உறைப்பாகத்தான் சமைப்போம். எங்கள் அம்மா, பாதி தேங்காய்ப்பூவில் சம்பல் அரைக்கவே, 10 மிளகாய் சேர்ப்பா. இப்போ நான் கொஞ்சம் குறைக்கப் பழகியுள்ளேன். அம்மா, மிளகாய்த்தூள் சேர்க்கும் கறிகளுக்க்குக்கூட 4/5 பச்சை மிளகாய் போட்டு வதக்கித்தான் சமைப்பா.

உடனேயே செய்திட்டீங்களா தளிகா மிக்க நன்றி. உங்கள் வாயிற்கு இதமாக இருக்கும். எல்லோரும் ஓடிவாங்கோ... முதல் தடவையாக தளிகா ஒரு குறிப்புச் செய்து சொல்லிப்போட்டா... ஓடிவாங்கோ... ஓடிவாங்கோ:).. தளிகா! நான் சந்தோஷத்தில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுக் கத்திவிட்டேன்.:) உடம்பைப் பார்த்துக் கொள்ளவும். உங்களுக்கு அதிக காரம் நல்லதல்ல.

ஜலீலாக்கா, சோயாசோஸ், சீனி சேர்க்கும்போது காரம் எதிர்பர்ப்பதை விடக் குறைவாகவே இருக்கும்.

ஷாதிகா அக்கா, உங்களைக் காண்பதே கஸ்டமாக இருக்கே. இந்தச் சம்பல் அம்மா அதிகமாக கூனி றாலில்தான் செய்து, வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பார்ஷல் பண்ணிக்கொடுப்பா. ஏனெனில் நீண்ட நாட்கள் பழுதடையாது. எனக்கு இங்கே றால் கருவாடு கிடைப்பது குறைவு, தற்செயலாகக் கண்டேன், உடனே செய்துவிட்டேன். இப்போ எதைக் கண்டாலும், அதை உடனே செய்து அறுசுவைக்கு அனுப்பவேண்டும் என்றே ஆர்வமாக இருக்கு. நான் கிச்சினில் என்ன சமைத்தாலும், என் கணவர் உடனே கேட்கிறார், என்ன அறுசுவைக்கு படம் போடவா செய்கிறீங்கள் என்று. நான் கிச்சினில் நிற்பதை அவர் காண்பது இல்லைப்போலும்:).

ஆஸியா, உண்மைதான், சீனி, உறைப்பை எடுத்துவிடும். ஆனால் அவரவரும் தமது அளவிற்கேற்ப குறைத்துக் கொள்ளலாம் மிளகாயை. உறைப்பில்லாவிட்டாலும் சுவை இருக்காது.
இது புட்டுக்கு மிகவும் பொருந்தமானது. சீனிச் சம்பல் பன் மாதிரி, இதை உள்ளே வைத்து பன்னும்(bun) செய்யலாம். பாணுக்கும் (bread)நல்லது.

இலா!! மெல்லமா, ஒருவருக்கும் சொல்லாமல் விரதத்தை முடிப்போமா?:) என்னாலும் முடியாமலிருக்கு:), அதிலும் மட்டின் றோல் பிறிச்சில் இருக்கு அதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்:).

ஜோன்சிராணி, சைனீஷ், பாகிஸ்தான், இந்திய, இலங்கைக் கடைகளில் கிடைக்கும். அவ்றிக்கன் கடைகளிலும் சிலவேளைகளில் கிடைக்கிறது சில கருவாடுகள்.

நல்லவேளை தற்செயலாகத்தான் இதனைக் கண்டேன். பதிலும் போட்டுவிட்டேன் எல்லோருக்கும் மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இப்பதான் கறுவாட்டுச் சம்பல் செய்து சாப்பிட்டுவிட்டு வாறேன்.நல்ல சுவையாக இருந்தது. நாட்டில இருந்து வர இருந்த ஒருவரிடம் சொல்லிட்டு வரவச்ச இரால் கறுவாடு. அதிரா அக்காவின் இரால் கறுவாட்டுச் சம்பல் செய்ய வேண்டும் என்று.
அடுத்த கிழமை குறிஞ்சா இலை வரும். வந்தால் சுண்டல் செய்வேன்.
அன்புடன் அதி

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சொல்லி வைத்து எடுத்துச் செய்வதைக் கேட்க சந்தோஷமாக இருக்கு. கெதியில் குறிஞ்சா வறையும் செய்யுங்கோ. என் குறிஞ்சா எல்லாம் முடிஞ்சு போச்சு:(

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

nalla karasaramana kurippu.nanri

Tharifa.