பேரீச்சம்பழ சட்னி

தேதி: March 12, 2009

பரிமாறும் அளவு: (6 -10)நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பேரீச்சம்பழம் - 250 கிராம்
செத்தல் மிளகாய் (காய்ந்தமிளகாய்) - (10 - 15)
இஞ்சி - 2"நீளமான ஒரு துண்டு
உள்ளி (பூண்டு) - 4 பல்
வினிகர் - ஒரு டம்ளர்
சீனி (சர்க்கரை) - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)
கஜு(முந்திரிப்பருப்பு (சிறிதாக வெட்டியது) - 50கிராம்
உப்பு - தேவையானளவு


 

பேரீச்சம்பழத்தை விதை நீக்கி துப்பிரவாக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு அரைப்பதமாக அரைத்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
பின்பு செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்), இஞ்சி, உள்ளி(பூண்டு)ஆகியவற்றை 2 மேசைக்கரண்டி வினிகர் விட்டு நன்றாக அரைத்தெடுக்க வேண்டும்.
அதன் பின்பு அரைத்து வைத்துள்ள பேரீச்சம்பழம், அரைத்து வைத்துள்ள கலவை, சீனி(சர்க்கரை), உப்பு, மிகுதியான வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அது சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள கலவையை போட்டு காய்ச்சவும்.
இக்கலவை ஓரளவு தடிக்க தொடங்கும் போது கஜுவை(முந்திரிப்பருப்பு) சேர்த்து கிளறவும்.
இக்கலவை நன்றாக தடித்ததும் இக்கலவையுள்ள பாத்திரத்தினை அடுப்பிலிருந்து இறக்கவும். அதன் பின்பு இக்கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்.
நன்றாக ஆறிய பின்பு இக்கலவையை தொற்று நீக்கிய ஜாம் போத்தலில் ஊற்றி அதை காற்று உட்போகாதவாறு நன்றாக மூடி வைக்கவும்.
அதன் பின்பு இச்சட்னி தேவைப்படும் நேரங்களில் எடுத்து பரிமாறவும்.
சட்னியை பற்றீஸ், ரோல்ஸ் கட்லெட், இடியப்பம், தோசை, இட்லி, சமோசா ஆகியவற்றுடன் பரிமாறலாம்.


இனிப்பு சுவையை உடையதும், இரும்புசத்து நிறைந்ததும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதுமான பழமே பேரீச்சம்பழம் ஆகும். இதனுடன் மருத்துவகுணம் நிறைந்த இஞ்சியும், உள்ளியுடன் கால்சியம்,மெக்னீஸியம் உள்ள மிளகாயும் சேர்ந்து இனிப்பு சுவையும் உறைப்பு சுவையும் கலந்து வித்தியாசமான சுவையுடன் காணப்படும் சட்னியே பேரீச்சம்பழம் சட்னி ஆகும். இதன் சுவையை அறிய நீங்களும் இதனை செய்து பார்த்து சுவைக்கவும். எச்சரிக்கை - பேரீச்சம்பழம் அலர்ஜியுடையவர்கள், சர்க்கரைநோயாளர், இருதயநோயாளர் ஆகியோர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - எல்லாவற்றையும் நன்றாக அரைத்தெடுத்து நன்றாக (தடிப்பாக) காய்ச்சவும் அத்துடன் இந்த சட்னி வைத்திருக்கும் போத்தலில் ஈரமான அல்லது துப்பரவற்ற கரண்டியை வைக்க வேண்டாம்(அதை வைத்தால் சட்னி பழுதடைந்துவிடும்).

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் துஷ்யந்தி இரண்டு நாட்கள் முன் இந்த பேரிட்சை சட்னி செய்தேன், ரெம்ப நல்ல இருந்தது, என் பையனுக்கும் ரொம்ப பிடித்திருந்தது, வினிகரும் இஞ்சி யும் சேர்ந்து வித்தியசமான டேஸ்ட்டில் இருந்தது.

நான் புளி, வெல்லம் சேர்ப்பேன்.
கார சோமாஸ், பஜ்ஜி வகைகலுக்கு அடிக்கடி நோன்பு காலங்களில் செய்வேன்,
இனி உங்கள் முறையில் ஒரிரு முறை செய்வேன்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாஅக்கா பேரிச்சம்பழசட்னி செய்து பார்த்து பின்னோட்டம் அனுப்பியதிற்கு உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் எனது நன்றி.

இப்படிக்கு
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த பேரீச்சம்பழ சட்னியின் படம்

<img src="files/pictures/aa181.jpg" alt="picture" />

ஜலீலா அக்கா நீங்கள் என்னுடைய பேரிச்சம்பழசட்னி யை பார்த்து செய்து சாப்பிட்டு விட்டு அதன் சுவை யை பற்றி எனக்கு எழுதியதுடன் அதனை படம் எடுத்து பாபு அண்ணாவின் உதவியுடன் எனது குறிப்பில் போட்டிருக்கிறீர்கள் அதற்காக உங்களுக்கும் பாபு அண்ணாவிற்கும் எனது நன்றியை கூறுகிறேன் அத்துடன் எனது குறிப்பை பார்த்து நீங்கள் தயாரித்த பேரீச்சம்பழ சட்னியின் படம் மிகமிக நல்ல வடிவாக இருக்கிறது .ஜலீலா அக்கா இதற்காக என்னும் ஒரு முறை எனது நன்றியை கூறுகிறேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"