காலிஃப்ளவர் பகோடா 1

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

காலிஃப்ளவர் - ஒன்று
கடலைமாவு - ஒன்னேகால் கப்
அரிசிமாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 3
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - அரை லிட்டர்
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் காலிஃப்ளவரை கழுவி சுத்தம் செய்து பூக்களை உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கவும்.
காலிஃப்ளவர்,வெங்காயம், பச்சைமிளகாய், கடலைமாவு ஒன்றரை கப், அரிசி மாவு உப்பு சேர்த்து ஓரளவு மெதுவாக பிசையவும்.
பிசைந்த மாவை எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்து தூவி விடவும்.


மேலும் சில குறிப்புகள்