கலவை பயறு மசாலா

வழங்கியவர் : asiya omar
தேதி : வெள்ளி, 13/03/2009 - 07:52
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு : 6-8 நபர்களுக்கு
- வெள்ளை கொண்டைக்கடலை - 25 கிராம்
- கருப்பு கொண்டைக்கடலை - 25 கிராம்
- ராஜ்மா - 25 கிராம்
- தட்டைபயறு - 25 கிராம்
- பாசிப்பயறு - 25 கிராம்
- காய்ந்த பச்சை பட்டாணி - 25 கிராம்
- காய்ந்த வெள்ளை பட்டாணி - 25 கிராம்
- பீன்ஸ் விதை - 25 கிராம்
- காராமணி - 25 கிராம்
- உருளை - 1
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 5 பல்
- ப்ட்டை - 1 துண்டு
- கிராம்பு, ஏலம் - தலா - 2
- சோம்பு,கசகசா - தலா அரைஸ்பூன்
- தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
- சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- கரம் மசாலா - அரை ஸ்பூன்
- கொத்த மல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு
- எண்ணெய் - 2-4 டேபிள்ஸ்பூன்
- எல்லாப்பயறு வகைகளையும் முதல் நாள் இரவு ஊற வைக்கவும்.
- ஊறிய பயறுகளுடன் உருளையை சேர்த்து குக்கரில் பக்குவமாக வேக வைத்து எடுக்கவும். இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் அரைத்து வைக்கவும்.
- பட்டை, ஏலம், கிராம்பு, சோம்பு, கசகசா பொடி செய்து அத்துடன் தேங்காய் சேர்த்து அரைத்து வைக்கவும். தக்காளி, வெங்காயம், மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயம் வதக்கவும். அதனுடன் இஞ்சிபூண்டு, மிளகாய் விழுது வதக்கி, பின்பு அரைத்த மசாலா தேங்காய் கலவை சேர்த்து வதக்கவும். பின்பு சில்லி பவுடர், மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாடை அடங்கியதும் தக்காளி சேர்த்து வேக வைத்த பயறு, உருளைக்கிழங்கை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதி வந்ததும் கரம் மசாலா, மல்லி இலை தூவி இறக்கவும்.
- சுவையான கலவை பயறு மசாலா ரெடி. இதனை பரிமாறும் போது சிறிது தக்காளி, வெங்காயம் கட் செய்து மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Note:
இது சப்பாத்தி, பரோட்டா, நாண், ப்ளைன் ரைஸ் உடன் பரிமாறலாம். காய்ந்த பயறு வகை கலவையாக பாக்கெட்டிலும் கிடைக்கிறது.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஆஸியா, இந்த குறிப்பு சப்பாத்தி மற்றும் பட்டூராவுடன் சாப்பிட மிகவும் அருமை. வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. சிறியவர்களுக்கும் பிடித்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். நன்றி உங்களுக்கு.