ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்

தேதி: March 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.4 (5 votes)

 

பாஸ்மதி ரைஸ் (வேகவைத்தது) - ஒரு கப்
பச்சை பட்டாணி (வேகவைத்தது) - கால் கப்
எண்ணெய் (அல்லது)நெய் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - 2-3
பூண்டு - 4
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 5
கொத்தமல்லி - சிறிதளவு


 

முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் (அல்லது)நெய் ஊற்றி சீரகம், பூண்டு, பச்சை மிளகாயை கீறி போடவும். கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம், வேகவைத்த பச்சை பட்டாணி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு வேகவைத்த பாஸ்மதி ரைஸ் இதில் போட்டு பிரட்டி விடவும்.
இதன் மேல் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி போடவும்.
இதோ சுவையான ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்னிக்கு இது தான் செய்தேன், நல்ல சுவையா இருந்தது. விளக்கப்படத்துடன் எடுத்து போடலாம்னு நினைத்தேன், டைம் இல்லாததால் படம் எடுக்க முடியலை. நல்ல குறிப்பு, வாழ்த்துக்கள்:))

அன்புடன்
பவித்ரா

மைதிலி
நேற்று இந்த ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ் செய்தேன் மிகவும் நல்ல டேஸ்ட்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிகவும் நன்றி மஹாபிரகதீஸ்,
பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மைதிலி நலமாப்பா? குழந்தைகள் இருவரும் எப்படியிருக்காங்க? அவர்கள் பெயரென்ன? இந்த ரைஸ் செய்தேன் நன்றாகயிருந்தது, நன்றி. நானும் இது அடிக்கடி செய்வேன், சீரக சாதம் என்று சொல்வோம். சாதம் தனியாகவும், தாளிதம் தனியாகவும் செய்து பிரட்டாமல், குக்கரிலேயே தாளித்து அரிசியும் போட்டு 2 விசில் விட்டு இறக்குவேன். நன்றாக இருக்கும்.

அன்புடன் :-).....
உத்தமி :-)

ஹாய் உத்தமி நலமா பா. பாஸ்கர் எப்படி இருக்கார்? நான் மற்றும் குழந்தைகளும் நலம் பா.
பெரியவன் சுஜித்( 6 வயது) சின்னவன் அபிஷேக் ஒரு வயது முன்று மாசம் பா.
அப்படியா நிங்களும் பன்னுவிங்கள மிக்க மகிழ்ச்சி பா. இந்த ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ் நான்
குக்கரில் செய்வேன் அனால் சாதம் உதிரியாக வராது எனக்கு அதனால் நான் அரிசி வேகவைத்து இதில் போட்டு பிரட்டிவிடுவேன். பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி பா.

செல்வி எப்படி இருக்கீங்க?
பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி பா.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

ஹாய் மைதிலி,
நான் இப்பத்தான் பின்னூட்டமே கொடுக்கப் போறேன். எப்படி தெரிஞ்சது? நேற்று இந்த ரைஸ் செய்தேன். என்னதான் நமக்கு நிறைய குறிப்புகள் தெரிந்தாலும் அடுத்தவர்கள் குறிப்பு சொல்லி செய்வதும் தனி சுகம் தான். ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆசியாவின் பாசிப்பருப்பு பொறிச்ச முட்டை கூட செய்தேன். என் கணவருக்கும் ரொம்ப பிடிச்சது. நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு செல்வி அக்கா
நீங்கள் பின்னூட்டம் அனுப்பிவிர்கள் என்று தெரியும் அதனால் நான் அதற்கு முன்பாக பதில் போட்டு விட்டேன்(Sorry it was a mistake) ஹி ஹி. வேறு ஒரு பின்னூட்டம் அனுப்புவதற்கு பதிலாக இங்கு டைப் பண்ணி விட்டேன் சாரி அக்கா.......... பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி

Mb

மைதிலி நல்லாயிருக்கோம்ப்பா. குக்கரிலிருந்து அப்படியே எடுத்து உபயோகித்தால் குழைந்த மாதிரித்தான் இருக்கும். குக்கர் திறந்ததும் நல்ல அகலமான பாத்திரத்தில் (அகலமான பேசின் அல்லது ட்ரே) அப்படியே சாதத்தை கவிழ்த்து பரத்திவிடவும். ஓரளவிற்கு ஆறியதும் (15/20 நிமிடங்கள்) மல்லி இலை தூவி கலந்து பறிமாறலாம். சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் நன்கு உதிரியாக வரும், ட்ரை பண்ணிப் பாருங்க. பாத்திரம் குழிவானதாக இருக்கக் கூடாது, 30cm நான்ஸ்டிக் பேண் வைத்திருக்கிறேன், அதில்தான் சாதத்தைப் பரத்தி ஆறவைப்பேன். அதிகமாகச் செய்யும் போதுமட்டும் பெரிய பேசின் உபயோகிப்பேன்.

அன்புடன் :-)
உத்தமி :-)

மைதிலி,
இன்று லன்ச்க்கு உங்க குறிப்பு, இந்த ஈஸி பட்டாணி சீரக ரைஸ் செய்தேன். நன்றாக சுவையாக இருந்தது. உத்தமி அவர்கள் சொன்ன மாதிரி இது நானும் குக்கரில் செய்வேன். இதை நான் ’பீஸ் புலாவ்’ என்று சொல்லுவேன். நான் எல்லாம் தாளித்து அதனுடன் கழுவி ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து ரைஸ் குக்கரில் வைத்துவிடுவேன். நன்றாக வரும். உங்க முறையும் ஈஸியாதான் இருக்கு. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ மிகவும் நன்றி பா.
பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி

Mb

பட்டானி ரைஸ் ரொம்ப நன்றாக இருந்தது.
நான் ஜீரா ரைஸ் இப்படி தான் செய்வேன். நல்ல டேஸ்டியா இருந்தது.
குக்கரில் செய்வதாக இருந்தால் குறைவா தண்னிர் வைத்து பாருங்க உதிரியா வரும்,
ரைஸ் குக்கரில் செய்தேன் உதிரியா வந்தது,

ஹாய் மைதிலி நானும் இந்த ரைஸ் செய்தேன் நன்றாக இருந்தது,என் வீட்டுக்காரருக்கு இப்படி சாதம் செய்தால் ரொம்ப பிடிக்கும், நன்றி மைதிலி.

மைதிலி
இந்த ரைஸ் செய்தேன், மிகவும் சுலபமாகவும் அழகாகவும் இருந்தது. உடனடியாகச் செய்து சாப்பிடும்போது நல்ல சுவையாகவும் இருந்தது. தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உத்தமி ரொம்ப நன்றி பா. நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்,
மைதிலி

Mb