சாம்பார்

தேதி: March 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

துவரம் பருப்பு - 1 கப்
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 4
வெங்காயம் - 2
முருங்கைக்காய் - 2
கத்தரிக்காய் - 1
உருளைக்கிழங்கு - 2
புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
காய்ந்தமிளகாய் - 2
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மசாலா வறுத்து அரைக்க :
மல்லி விதை - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பூ - 1 மேசைக்கரண்டி


 

துவரம் பருப்பை 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெங்காயம், முருங்கைக்காய், கத்தரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
புளியைக் கரைத்து வைக்கவும். அரைப்பதற்கு கொடுத்த பொருட்களை வறுத்து அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போடவும். அது வெடித்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் போட்டு வதக்கவும்.
பின்பு தக்காளியைப் போட்டு குழைய வதக்கவும். காய்கறிகளைப் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
காய்கள் வேகுவதற்குத் தேவையான அளவு தண்ணீர் விடவும்.
காய்கறி வெந்தவுடன் புளிக்கரைசல், வேகவைத்த பருப்பைச் சேர்த்து ஒரு கொதிவிடவும்.
பின்பு அரைத்த மசலாப் பொடி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.


இதை சோறு, புட்டு, இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்