பொரிச்ச குழம்பு

தேதி: March 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

பாசிப்பருப்பு- 2 கைப்பிடி
பீர்க்கங்க்காய் துண்டுகள்- 1 கப்
முருங்கைத்துண்டுகள்- 6
தக்காளி பொடியாக அரிந்தது- அரை கப்
சின்ன வெங்காயம் அரிந்தது- அரை கப்
தேங்காய்த்துருவல்- ஒரு கைப்பிடி
சோம்பு- 1 ஸ்பூன்
வடகம்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை- சில இலைகள்
தேவையான உப்பு,
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
கொத்தமல்லித் தூள்- அரை ஸ்பூன்


 

பாசிப்பருப்பை போதுமான நீர் விட்டு வேக வைக்கவும். முக்கால்வாசி வெந்ததும் காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள், தக்காளி, தூள்கள் சேர்த்து வேக வைக்கவும். தேங்காயை சோம்புடன் அரைத்துச் சேர்த்து கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும் எண்ணெயை ஒரு சிறிய வாணலியில் ஊற்றி வடகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தாளித்துக் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்