புழுங்கலரிசி ஆப்பம்

தேதி: March 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கலரிசி- 4 கப்
உளுந்து- 1 கைப்பிடி
வெந்தயம்- 1 ஸ்பூன்
முதல் நாள் சாதம்- 2 கைப்பிடி
தயிர்- அரை கப்
தேவையான உப்பு
சோடா உப்பு- அரை ஸ்பூன்


 

புழுங்கலரிசியைத் தனியாகவும் உளுந்து, வெந்தயத்தைச்சேர்த்து தனியாகவும் போதுமான நீரில் 8 மணி நேரம் ஊற வைத்து முதலில் உளுந்தை நன்றாக அரைக்கவும். பின் அரிசியை மையாக அரைத்து இறுதியில் சாதம், தயிர் சேர்த்து மையாக அரைக்கவும். மாவுகலை ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து பொங்க விடவும். ஆப்பம் சுடுவதற்கு அரை மணி நேரம் முன்பு சோடா உப்பு கலந்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்