பொட்டேட்டோ ஃபிரை

தேதி: March 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளை கிழங்கு -2
கடலைமாவு -2ஸ்பூன்
மிளகாய்தூள் -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
இஞ்சி,பூண்டுவிழுது -1/2ஸ்பூன்
எண்ணை -பொரிக்க தேவையான அளவு


 

உருளைகிழங்கை தோல்சீவி விரல் நீள துண்டுகளாக நறுக்கி அரைபதம் வேகவைத்து தண்ணீர் வடித்துவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,இஞ்சி,பூண்டு விழுது,மிளகாய்தூள்,உப்பு போட்டு பிசிறி வெந்த உருளை கிழங்கை போட்டு நன்கு பிரட்டவும்.மசாலா கிழங்கில் நன்கு சேரவேண்டும்.
1/2மணிநேரம் ஊறவைக்கவும்.
வணலியில் எண்ணையை காயவைத்து கிழங்கை போட்டு பொரித்து எடுக்கவும்.
தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்