ஓட்ஸ் பிஸ்கட்டுகள்

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

மைதா மாவு - 90 கிராம்
கொப்பரைத் தேங்காய் துருவல் - 60 கிராம்
ஓட்ஸ் - 60 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
சமையல் சோடா - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 100 கிராம்
தேன் அல்லது கோல்டன் சிரப் - ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் - ஒரு தேக்கரண்டி


 

மைதா மாவையும், சமையல் சோடாவையும் சலிக்கவும்.
ஓட்ஸ், தேங்காய் துருவலையும் சேர்த்து ஒன்றாய் கலக்கவும்.
வெண்ணெயுடன் கோல்டன் சிரப், தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து உருக்கவும்.
வெண்ணெயும் மற்ற சாமான்களும் உருகிய பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.
இதை மாவுடன் சிறிது சிறிதாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு மாவினை சிறு சிறு உருண்டைகளாக்கி சிறிது இடைவெளி விட்டு, நெய் தடவிய தட்டில் வைக்கவும்.
350 டிகிரி F சூட்டில் சுமார் 15 நிமிடம் வரை பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்