சைனீஸ் சிக்கன் ஃப்ரை

image

வழங்கியவர் : Mahalakshmiprag...

தேதி : திங்கள், 16/03/2009 - 09:47

ஆயத்த நேரம் : 1 hr

சமைக்கும் நேரம் : 30 min

பரிமாறும் அளவு : 3

0
No votes yet
Your rating: None
 

 

  • கோழி - 1/2 கிலோ
  • வெங்காயம் - 1
  • சோயாசாஸ் - 1/2 கப்
  • வினிகர் - 1/4 கப்
  • நல்லமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
  • அஜினோமோட்டோ - 1/4 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
  • கார்ன்ஃப்ளார் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • மைதாமாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

 

  • கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கழுவிய கோழித்துண்டுகளைப்போட்டு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம், நல்லமிளகுத்தூள், மஞ்சள்தூள், சோயாசாஸ், வினிகர், நல்லெண்ணெய், அஜினோமோட்டோ மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்துள்ள கோழித்துண்டு கலவையை 1 மணி நேரம் கழித்து அப்படியே எல்லாவற்றையும் குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 1- 2 விசில் விட்டு அரைவேக்காடு வேகவைத்து குக்கரை இறக்கவும்.
  • பின்னர் கார்ன்ஃப்ளார் மாவு, மைதாமாவு இவற்றை ஒன்றாக போட்டு சிறிது தண்ணீர் விட்டு கட்டிதட்டாமல் கரைத்து வைக்கவும்.
  • வாணலியில் பொரிக்கத்தேவையான அளவு எண்ணெய் விட்டு அது காய்ந்ததும். குக்கரில் இருந்து கோழித்துண்டுகளை மட்டும் எடுத்து கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் இரண்டிரண்டாக போட்டு நன்றாக பொரித்து சிவந்ததும் எடுக்கவும். சூடாக இருக்கும் போதே பரிமாறவும்.

Note:

நீங்கள் உப்பு போடும் போது பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயம், அஜினமோட்டோவிலும் சரி சோயா சாஸிலும் உப்புத் தன்னமையுடையது. அதனால் உப்பை குறைவாக போடுவது நல்லது.