சிம்பிள் உருளை பட்டாணி பொரியல்

தேதி: March 16, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது)
தக்காளி - 1 (துண்டுகளாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 3/4 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
பொரிகடலைமாவு - 1 டேபிள் ஸ்பூன் (பொரிகடலையை லேசாக வறுத்து பொடிக்கவும்)
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப


 

முதலில் உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேகவைத்து தோலுரித்து துண்டு களாக்கிக் கொள்ளவும். பச்சை பட்டாணியும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின்னர் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும், நன்றாக வதங்கியதும் தக்காளியைப்போட்டு நன்றாக குழைய வதக்கவும்.
பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் தேவையான அளவு உப்பும் போட்டு நன்றாக கிண்டவும்.
மிதமான தீயில் அடுப்பைவைத்து சமைக்கவும் அதில் வேகவைத்த பட்டாணி, வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறி இறக்கும் முன் பொரிகடலை மாவைத்தூவி இறக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி மூடிவைக்கவும். சப்பாத்தி, பூரிக்கு நல்ல பொருத்தமான சைட் டிஷ்.


மேலும் சில குறிப்புகள்