வெஜ் தாளிச்சா

தேதி: March 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

 

பருப்பு வேக வைக்க:
கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு
துவரம் பருப்பு - கால் ஆழாக்கு
மஞ்சள் - அரை தேக்கரண்டி
காய் வேக வைக்க:
முருங்கைக்காய் - ஒன்று
கத்திரிக்காய் - மூன்று
கருணைக்கிழங்கு - ஒரு துண்டு
வாழைக்காய் - ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியாத்தூள் - மூன்று தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
புளி - ஒரு பெரிய லெமன் அளவு (கெட்டியாக கரைத்து கொள்ளவும்)
தாளிக்க:
எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
கடுகு - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு பெரிய கொத்து
கொத்தமல்லி தழை - சிறிது மேலே தூவ


 

காய் கறிகளை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை களைந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த பருப்பை எடுத்து குக்கரில் போட்டு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கி கரண்டியால் ஒன்றும்பாதியுமாக மசித்துக் கொள்ளவும்.
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, காய்கறிகள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு, பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லி தழை எல்லாவற்றையும் ஒன்றாக போடவும்.
எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு பிசறி இரண்டு நிமிடம் ஊற வைக்கவும்.
அதன் பிறகு அடுப்பில் வைத்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தீயை மிதமாக வைத்து வேக வைக்கவும். காய்களை குழைய விடாமல் வேக வைக்கவும்.
காய்கள் வெந்ததும் கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றவும். மாங்காய் சேர்த்தால் நன்றாக இருக்கும், மாங்காய் சேர்ப்பதாக இருந்தால் புளியின் அளவை குறைத்து கொள்ளவும்.
புளி வாடை அடங்கியதும் மசித்து வைத்துள்ள பருப்பை அதில் சேர்க்கவும்.
பருப்பை சேர்த்து கிளறி விட்டு அடிப்பிடிக்காமல் கொதிக்க விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை அனைத்தையும் கொதித்துக் கொண்டிருக்கும் தாளிச்சாவில் சேர்க்கவும்.
சுவையான வெஜ் தாளிச்சா ரெடி. அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

இஸ்லாமிய இல்லங்களில் ஒரு விசேஷம் என்றால் பகாரா கானா, கறி உருளைக்கிழங்கு சால்னா, தாளிச்சா, மட்டன் ப்ரை (அ) மட்டன் கூட்டு, வெங்காயமுட்டை, அப்பளம், ஏதாவது இரு வகை ஸ்வீட் செய்வார்கள். இது பிரியாணிக்கும் தொட்டு கொள்ள நன்றாக இருக்கும். பிரியாணிக்கு செய்வதாக இருந்தால் கெட்டியாக செய்து கொள்ளவும், பகாரா கானாவிற்கு என்றால் சாம்பார் போல் செய்து கொள்ளவும். இது கர்ப்பிணி பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும், வாய்க்கு ருசிப்படும். மேலே உள்ள குறிப்பில் வாழைக்காய், மாங்காய் இல்லாததால் சேர்க்கவில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் நன்றி.. கண்டிப்பா நான் செய்கிறேன்.

சூப்பர் நன்றி.. கண்டிப்பா நான் செய்கிறேன். பஹாரா கானா என்றால் என்ன?

சூப்பர் நன்றி.. கண்டிப்பா நான் செய்கிறேன். பஹாரா கானா என்றால் என்ன?

ஹாய் ஜலீலக்கா,
சூப்பரோ சூப்பர்..கட்டாயம் இந்த வாரம் இதான் பாருங்க..நீங்க தந்த வெஜ் தாள்ச்சா அருமையா இருந்தது
இப்பல்லாம் நீங்க போடுற படங்கள் ரொம்பவே தெளிவாக இருக்கு.very gud

lakshmi ravindran
i like thalicha very much, but i dont know how to do, thanks for this recipe and lovely photographs

lakshmi ravindran

ஜலீலாக்கா!!!கறியைப் பார்த்ததுமே, ஆவலில் திறந்தேன், உங்கள் காய்கறிகளுக்கு நான் எங்கே போவேன், கருணைக்கிழங்கு, முருங்கைக்காய் இதெல்லாம் இங்கே கஸ்டமக்கா. இதற்குப் பதில் வேறு என்ன பாவிக்கலாம், செய்யவேண்டும் போலுள்ளது?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நாங்களும் இந்த மாதிரி செய்வோம் கீ ரைஸ்க்கு. ஆனால் கருணை கிழங்கு சேர்த்ததில்லை. வித்தியாசமா இருக்கு. செய்து பார்க்கிறேன். பார்த்ததும் ஆசையா இருக்கு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நல்ல ப்ரெசன்ட் பண்ணி இருக்கீங்க.வெரைட்டியாக காய் சேர்த்து செய்திருக்கீங்க.நான் கத்திரிக்காய்,மாங்காய் மட்டும் தான் சேர்ப்பேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எனக்கும் தனிஷா போல பார்த்ததும் சாப்பிட ஆசை வந்திட்டது.நான் வெஜ் தாளிச்சா தான் சாப்பிட்டு இருக்கேன்.இது ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.
இந்த குறிபிற்க்கு மிக்க நன்றி.

பர்வீன்.

விஜி உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று எனக்கு தெரியும் அதான் இனி கொஞ்ச நாளைக்கு வெஜ் ரெஸிபி கொடுக்கலாம். என்றும், இந்த வருடம் மசக்கை ராணிகள் வருடம் ஆகையால் அவர்களுக்காக சில ரெஸிபிகள்.

தளிகா இது உங்களுக்காகவும் தான்.

டியர் லக்ஷ்மி ரவீந்திரன் மிக்க நன்றி.

அதிரா ஆஹா கருனை, முருங்கை கிடைக்காதா?
நான் வேன்டுமானால் எல்லாம் இரண்டு இரண்டு கிலோ பார்சல் அனுப்பவா?

ஆசியா சொல்லி உள்ள படி கத்திரிககய் மாங்காய், மற்றும் (சேப்பங்கிழங்கு (அ) உருளை ) சேர்த்து செய்து பாருங்கள், வாழக்காய் கிடைக்குமா?கேரட் சேர்த்தாலும் நல்ல இருக்கும்.(மெயின் கத்திரிக்காய்,முருங்கை,வாழக்காய், கருனை,மாங்காய்)

தனிஷா தால்சா என்றால் அதுக்குன்னே ஸ்பெஷலா இந்த காய்கள் இருந்தால் தான் செய்வோம், இஸ்லாமிய இல்லங்களில் கறி குருமா வைக்காமல் செய்பவர்கள் மட்டன் எலும்பு சேர்த்து கேரட் சேர்த்து செய்வார்கள். அது நான் செய்வதில்லை. எனக்கு பிடிக்காது.

டியர் ஆசியா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

பர்வீன் நலமா? பிள்ளைகளுக்கு தேர்வு எல்லாம் முடிந்ததா?
உங்களை அவ்வளவாக இப்போது அருசுவையில் காணும். ரொம்ப பிஸியா?
தலைவலி பரவாயில்லையா?
நீங்கள் இன்னும் உங்கள் மெயில் ஐடி தரல.

Jaleelakamal

தீயெறிச்ச சாதம்

இதை விட கர்பிணி பெண்கள் கவணத்திற்கு.

மீதி ஆகும் தால்சா, கொஞ்சம் கறி குருமா, பகாறா கானா இதை தீயெறிக்கனும் அதாவது தால்சா , சால்னாவை தண்ணீர் கொஞ்சம் சேர்த்து சாம்பார் மாதிரி கொதிக்க விடனும், பிறகு பகறா கானாவை சூடு படுத்தி கொதிக்க விடனும், நல்ல சாம்பார் சாதம் போல் கொதிக்க விடனும், சுருள கிளறி ஆறவைத்து இதற்கு தொட்டு கொள்ள (அப்பளம் (அ) நார்த்தங்காய் ஊறுகாய் (அ) மசால் வடை செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இதற்காகவே ஒவ்வொரு முறை இந்த சாப்பாடு செய்யும் போது கூட கொஞ்சம் சேர்த்து செய்வீர்கள்.

ஜலீலா

Jaleelakamal

jaleelaஅக்காவுக்கு என்னுடைய சலாம் எப்படி இருக்கிங்க,என்னை ஞாபகம் இருக்கா,நான் கன்சீவ் ஆகி இருப்பதால் கம்ப்யுட்டர் ஆன் செய்து 5மாதங்கள் ஆகிவிட்டன,நெய் சோறு சாப்பிடனும் பொல இருந்ததால் குறிப்பு பார்த்து கொண்டிருன்தேன் இன்று தால்சாவயும் சேர்த்து செய்துவிட வேண்டும் இன்ஷா அல்லாஹ்,
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

டியர் ரிஸ்வானா நல்லாவே நியாபகம் இருக்குவாஅலைக்கும் அஸ்ஸலாம், உடம்பை நல்ல பார்த்துக்கோங்கோ, எந்த கவலையும் படாமால் இருக்கவும், டெலிவரி இங்கா ஊரிலா?

நான் தான் சொல்லி உள்ளே இங்கு உள்ள எல்லா கர்பிணி பெண்களின் நியாபகத்தில் தான் இந்த ரெஸிபியே கொடுத்தேன் அடுத்த ரெஸிபியும் ரெடி அனுப்ப தான் டைம் இல்லை.
கண்டிப்பா செய்து சாப்பிடுங்கள் மாங்காய் கிடைத்தால் சேர்த்து கொள்ளுங்கள், மாங்காய் புளி ஊற்றும் போது சேர்க்கனும்.

நிறைய மங்காய் போடுவதாக இருந்தால் புளி ஒரு கொட்டை பாக்கு அள்வு இல்லை போட கூட் தேவையில்லை.

ஜலீலா

Jaleelakamal

ஞாபகம் வைத்திருப்பதர்க்கு ரொம்ப நன்றி நானும் தாளிச்சா இப்படித்தான் செய்வேன் ஆனால் மட்டன் போட்டு,இன்று காய்கறி போட்டு செய்துவிடவேண்டும் உங்களுடய அடுத்த ரெசிபி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

அய்யோ ஜலீலா,எங்க வாப்பாவை நினைவு படுத்திட்டீங்களே !அவங்க இறையடி சேர்ந்து 24 வருடம் ஆகுது.தீயெரிச்ச சோறு செய்யும் போது எங்க ஊரில் சப்பாணி ஊறுகாய்ன்னா ஃபேமஸ்,ஆசியாமா 10 காசு கொடுத்து ஒரு பாக்கட் நார்த்தங்காய் ஊறுகாய் வாங்கி வான்னு சொல்வாங்க.நானும் அடிக்கடி செய்து சாப்பிடுவேன்,என் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஜலீலா... ஓடியாங்க. சமைச்சுடோம்ல இந்த தாளிச்சா'வை. சாப்பிட்டுகிட்டே தான் பதிவு போடறேன். சூப்பர். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆசியா ரொம்ப கழ்டமா போச்சு உங்கள் வாப்பா ஞாபகம் வந்து விட்டது என்றீர்கள்.
உங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை.உங்கள் வாப்பா என்றும் உங்களோடு தான் இருக்கிறார்கள் என்று நினைத்து கொள்ளுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

நான் என்ன சேர்த்தேன்னு சொல்லவே இல்லையே... நீங்களும் கேக்கவே இல்லையே.... கத்திரிக்காய், முல்லங்கி, கேரட், உருளை சேர்த்து செய்தேன். நீங்க சொல்ற காயெல்லாம் வேணும்ன்னா நான் பக்கத்து நாட்டுக்கு போணும். :( அதான் இப்படி. என்னவர் இப்ப தான் சாப்பிட்டு போனார்.... சூப்பரா இருக்குன்னு. ஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெஜ் தாளிச்சா அருமையாக இருந்தது..நான் அதை மறந்தே விட்டேண்..என் பக்கத்து வீட்டு பெண் தான் ஆசையை கிளப்பிவிட்டாள் உடனே செய்து விட்டேன் ..நீங்க செய்த மாதிரியே வந்தது நான் இட்லியோடு செய்து சாப்பிட்டேன்.பேஷ் பேஷ்

வெஜ் தால்சா தளிக்கா நல்ல புளிப்பா செய்து சாப்பிட்டாச்சா.

உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal

நான் ஒருத்தி செய்ததா சொன்னனே... கண்டுகிட்டீங்களா?? கா உங்க கூட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அவசர படுகிறீகளே அருசுவை ஓப்பன் பண்ண முடியல தளிகா விற்கு போட்டு விட்டு உங்களுக்கு போடுவதற்குள் க்ளோஸ் ஆகிவிட்டது அதான் மறுபடி வந்தேன்.
முல்லங்கி இதுவரை சேர்த்ததா கேள்வி படல ஆனால் மட்டன் சேர்த்து சமைக்கும் தால்சாவில் கேரட் போடுவார்கள்.

மிக்க நன்றி (சிரியா வனிதா) உடனே செய்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு.

ஜலீலா

Jaleelakamal

சரி... பழம் விட்டுட்டேன். முல்லங்கி சேர்த்ததும் சுவையாகவே இருந்துச்சு ஜலீலா. நான் எங்க போறது நிங்க சொல்ற காய்க்கு.... கிடைச்சதில் செய்தேன். சூப்பரா இருந்தது. இனி நானும் அடிக்கடி செய்வேன் தெரியுமோ.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

போன வாரம் மட்டன் பிரியாணிக்கு இதை செய்தேன்.ரொம்ப நன்றாக வந்தது.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஜலீலா மேடம், இன்று உங்க வெஜ் தால்சா, பருப்பு சாம்பார் மாதிரியே இருக்கேன்னு நினைத்தேன், ஆனால் கடலை பருப்பும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டும் சேர்த்தது புதுவிதம் (உங்க முறை) . அருமையோ அருமை. உங்க பகாறா கானா உடன் தான் சாப்பிட்டோம். படமும் அட்மினுக்கு அனுப்பியுள்ளேன். நன்றி.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

ரொம்ப நாளாவே செய்யவேண்டுமென்று நினைத்திருந்த உங்க பகாறா கானா & வெஜ் தாளிச்சா நேற்று டின்னருக்கு செய்தேன். இரண்டும் சேர்ந்து ரொம்ப நல்ல காம்பினேஷன் அக்கா! வெகு அருமையான உணவாக சாப்பிட்டோம்.என் கணவருக்கும் ரொம்ப பிடித்திருந்தது.

உங்க‌ வெஜ் தாளிச்சா சாப்பிட்ட‌தும் என‌க்கு ம‌ல‌ரும் நினைவுக‌ள்! நான் சிறுவ‌ய‌தா இருக்கும்போது, ப்ளாட்டில் நாங்க‌ மூன்றாவ‌து மாடியிலும், எங்க‌ ப்ர‌ண்ட் குடும்பம் இர‌ண்டாவ‌து மாடியிலும் வ‌சித்தோம். ரொம்ப நல்லா ப‌ழ‌க்க‌ம், ப‌ண்டிகை தின‌ங்க‌ளில் அவ‌ங்க‌ எங்க‌ வீட்டு வடை பாயாச சாப்பாடும், ப‌க்ரீத், ர‌ம்ஜானில் அவ‌ங்க‌ வீட்டு பிரியாணியை நாங்க‌ளும் சாப்பிட்டு மகிழும் அளவுக்கு! அதிலும் கத்திரிக்காய் போட்டு அவங்க வைக்கும் ஒரு தால், சூப்பரா இருக்கும். நான் என் கல்யாணத்திற்கு அப்புறம், இங்க வந்தபிறகு, ஒரு சில முறை, நானாகவே அந்த டிஷ் தயாரித்து பார்த்து அதேபோல வரவில்லையென்று விட்டுவிட்டேன். நேற்று இரவு இந்த தாளிச்சா செய்ததும் சாப்பிட்டு பார்த்தா, அட, அதேபோல அருமையான டேஸ்ட்!! :) சோ, இப்பதான் எனக்கு இந்த தா(ளிச்சா)லின் ரகசியம் தெரிந்தது!. இனி, அப்பப்ப செய்திடுவேன். அருமையான குறிப்பும், கூடவே மலரும் நினைவுகளையும் கொடுத்ததற்கு மிக்க‌ நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஜலீலா மேடம்.உங்க பகாறா கானா,வெஜ் தாளிச்சா செய்து சாப்பிட்டாச்சு..சூப்பரா இருந்துச்சு..நைட்டுக்கும் சேர்த்து செய்தேன் மதியானமே காலி..இனி அடுத்த வாரம் நெய் சோறு,நான் -வெஜ் தாளிச்சாவும் செய்யனும்..,நான் -வெஜ் தாளிச்சா ரெசிபி குடுங்களேன்.டெலிவரிக்கு முன்னாடியே சீக்கிரமா செய்து சாப்பிடனும்னு ஆசையா இருக்கு.please..

Kalai

Vr Scorp, வனி, கலா, சுஸ்ரீ, பாப்ஸ் அனைவருக்கும் நன்றி.

ஜலீலா

Jaleelakamal

தாளிச்சா சூப்பர்.. தீயரிச்ச சோறு என்றால் என்ன ?pls .............

ஹசீன்

தீயெறிச்ச்ச சாதம் என்றால் விஷேசங்களில் மீதியாகும், பகறா கானா, தாளிச்சா, கறி குழம்பு முன்றையும் சேர்த்து கிளறி சாப்பிடுவது,
ஒரு பங்கு பகாரா கானா ஒரு பவுள், ( கறி குழம்பும், தளிச்சாவும் சேர்த்து கொதிக்க விட்டு சூடு படுத்திய பகறாகானா போட்டு பிரட்டி இரக்கனும், இதற்கு தொட்டு கொள்ள, அப்பளம், நார்த்தங்காய் ஊறுகாய், மசால் வடை எல்லாம் நல்ல இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

thaankspa இன்ஷா அல்லா நாளை செய்து மீர வைத்து மறு நாள் செய்கிறேன்.

ஹசீன்

அன்பு ஜலீலா,

வெஜ் தாளிச்சா செய்து கொடுத்தேன். வீட்டில் எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. என் கணவருக்கு இந்த தாளிச்சா மிகவும் பிடிச்சிருந்தது.

தீயெரிச்ச சாதம் பற்றி நீங்க சொல்லியிருக்கறதைப் படிக்கறப்போ, அது சாப்பிடுவதற்காகவே கொஞ்சம் அதிகமாக சமையல் செய்து பார்க்கணும்னு தோணுது.

அன்புடன்

சீதாலஷ்மி