பாதாம் பிஸ்கட்டுகள்

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்ணெய் - 100 கிராம்
பொடித்த பாதாம் - 30 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
கார்ன் மாவு - 30 கிராம்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்


 

வெண்ணெயை நன்றாகக் குழைக்கவும். பொடித்த பாதாம் பருப்பைச் சேர்க்கவும்.
மைதா மாவையும், பொடித்த சர்க்கரையையும் சேர்த்து குழைத்த வெண்ணெய்க் கலவையில் சேர்க்கவும்.
பூரிமாவு போல கலக்கவும். கால் அங்குல பருமனுக்கு அப்பளம் போல் இட்டு பிஸ்கட் அச்சினால் வெட்டி பேக் செய்யும் தட்டில் வைக்கவும்.
தட்டிலேயே சுமார் ஒரு மணிநேரம் வைக்கவும்.
பிறகு 350 டிகிரி F சூட்டில் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.


பாதாம் பருப்பிற்கு பதில் பொடித்த முந்திரியை எசன்ஸ் சேர்த்து உபயோகிக்கவும்.

மேலும் சில குறிப்புகள்