status---- விளக்கம் ப்ளீஸ்..

எனக்கு ஒரு சந்தேகம்....
status என்றால் என்ன??
அனைவரையும் விமர்சனம் செய்யும் அருண் அவர்களே...
பதில் தெரிந்தால் சொல்லுங்கள்........
பதில் மட்டும் சொல்லுங்கள்....(கட்டுரை எழுதாதீர்கள்)

அனைவரும் இதற்கு பதில் சொல்லுங்கள்...

Status - நிலவரம்

என்று பொருள். இதை தான் கேக்கறீங்களான்னு தெரியலை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்டேட்டஸ் என்றால் என்ன? ஹூம்ம் ரொம்ப கஷ்டமான கேள்வி. எளிய பதில்! அவனவன் மனசில ரொம்ப லாடு லபக்கு தாஸ்ன்னு நினப்போட அலைவது . இது தான் என்னை பொருத்தவரை ஸ்டேட்டஸ். என் விளக்கம்:
"சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" இந்த குணாதிசயம் இருப்பவரே மேன்மையானவர். வலக்க்கை கொடுப்பதை இடக்கைக்கு தெரியாதவாறு கர்வமில்லாமல் இருப்பவர் மேன்மையானவர்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

anbe sivam
தரம், அந்தஸ்த்து..?

anbe sivam

நிலை'னு சொன்னா சரியா இருக்கும்'னு நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்டேட்டஸ்ன்னா கௌரவம்னு கூட சொல்வார்கள்.
கௌரவம்னா, மற்றவர் மதிக்கும் அளவிற்கு நல்ல குணத்துடன்,அடுத்தவர்க்கு உதவி செய்து வாழ்வது என்றுகூட சொல்வார்கள்.

நன்றி இலா,கவிதா,கீதா,வனிதா அவர்கலே.....
ஸ்டேட்டஸ் என்பது பணம் சம்பந்தப்பட்ட விஷயமா......
இல்லை அவருக்கு இருக்கும் மதிப்பு சம்பந்தப்பட்டதா....
எனக்கும் என் கனவருக்கும் ஒரே வாக்குவாதம்......

பணம் பணம் பணம் ... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதென்னப்பா, பஹ்ரைன் பக்கம் உள்ள பொண்ணுங்க எல்லாமே அவரவர் வீட்டுக்காரர்களோடு வாக்குவாதம் பண்ணுவதுன்னே முடிவு பண்ணியிருக்கீங்களா?

அங்க சோனியா ஒருபக்கம் சண்டை போடாம இருக்கது எப்படின்னு த்ரெட் ஆரம்பிச்சா, நீங்க ஸ்டேட்டஸ் பத்தி வாக்குவாதம் பண்ணிட்டு இருக்கீங்க?

பொதுவா ஸ்டேட்டஸ் என்பது பணத்தால் வரும் கௌரவத்தை குறிக்கும் சொல்லாகவே புழக்கத்தில் இருக்குது.

ஐயோ வாக்குவாதம் என்றால் சீரியசாக இல்லை....
சும்மா,அவர்களின் வாயை கிளறுவதற்கு...
விளையாட்டாக பேசினால்தானே அவர்களின் எண்ணத்தை புரிந்து கொள்ள முடியும்...
ஷர்மி எப்பொழுதுமே சீரியசாக இருக்க மாட்டாள்...

ஐயோ வாக்குவாதம் என்றால் சீரியசாக இல்லை....
சும்மா,அவர்களின் வாயை கிளறுவதற்கு...
விளையாட்டாக பேசினால்தானே அவர்களின் எண்ணத்தை புரிந்து கொள்ள முடியும்...
ஷர்மி எப்பொழுதுமே சீரியசாக இருக்க மாட்டாள்...

மேலும் சில பதிவுகள்