வாழ்த்து அட்டை செய்முறை - 8

தேதி: March 18, 2009

Average: 5 (1 vote)

இந்த வாழ்த்து அட்டை செய்முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இங்கே செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

 

வெறும் வாழ்த்து அட்டைகள் & உறைகள்
பசை/கோந்து
வர்ண அட்டைகள் & கடுதாசிகள்
பெயிண்ட்
டிசைனர் கத்தரிக்கோல்கள்
கத்தரிக்கோல்
அலுமினியம் பாயில் (Al Foil)
ஸ்டைலஸ் டூல்(Stylus tool) - எம்போஸிங் செய்ய (for embossing)
க்ராஸ் ஸ்டிச் (Cross stitch) வடிவங்கள் (பூக்கள் etc.)

 

க்ராஸ் ஸ்டிச் வாழ்த்து அட்டை: ஒரு வர்ண அட்டையில் சிறிய சதுரமான துண்டு ஒன்றை வெட்டி அதன் ஓரங்களை டிசைனர் கத்தரிக்கோலால் வெட்டி அழகாக்கவும்
பின்னர் அட்டையின் நடுவில் க்ராஸ் ஸ்டிச் பூவை வைத்து ஒட்டவும்.
பின்னர் அந்த அட்டையை வெறும் வாழ்த்து அட்டையின் நடுவில் வைத்து ஒட்டி விளிம்புகளை ஸ்டைலஸ் டூலால் எம்போஸ் செய்து வாழ்த்து அட்டையின் மூலைகளில் பிடித்த டிசைன்களை வரைந்து விரும்பிய வாசகத்தை எழுதவும்.
மெட்டல் எம்போஸிங் வாழ்த்து அட்டை: ஒரு துண்டு அலுமினியம் பாயிலை ஒரு கடினமான மேற்பரப்பின் மீது வைத்து அதன்மேல் விரும்பிய உருவத்தை வைத்து பதிக்கவும்.(Tracing)
பின்னர் அந்த பாயிலை ஒரு மென்மையான போம் ஷீட்டின் மீது அல்லது மவுஸ் பேட்டில் வைத்து எம்போஸிங் செய்யவும்.
பின்னர் எம்போஸ் செய்த உருவத்தின் அமுங்கிய பக்கத்தில் பசை/க்ளூ ஊற்றி பரவி காய விடவும். இவ்வாறு செய்வதால் பாயிலை வாழ்த்து அட்டையில் வைத்து ஒட்டும் போது அமர்த்துபடாமல் இருக்கும்.
பின்னர் ஒரு வெறும் வாழ்த்து அட்டையின் முன்புறத்தில் ஜன்னல் போல சிறிய துண்டை வெட்டி எடுக்கவும்.
பின்னர் எம்போஸிங் செய்த அலுமினியம் பாயிலை அளவாக வெட்டி அட்டையின் உட்பறத்தில் வைத்து ஒட்டவும்.
பின்னர் ஒரு வர்ண கடுதாசியில் அட்டையின் அளவு துண்டை வெட்டி உட்பக்கமாக அலுமினியம் பாயிலை மறைத்து ஒட்டி மடித்து விடவும்.
வாழ்த்து அட்டையின் முன் புறம் எம்போஸிங்கை சுற்றி வர்ண கடுதாசியை ஒட்டவும். அதோடு எம்போஸிங் செய்யாத பாயில் பகுதியில் விரும்பிய டிசைன்களை போடவும் (eg: 'S', Spiral etc.)
பின்னர் வாழ்த்து அட்டையில் விரும்பிய வாழ்த்து வாசகத்தை எழுதவும்.
இவ்வாறு பிடித்த முறையில் எம்போஸிங் செய்து வாழ்த்து அட்டைகள் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிகவும் அருமை இந்த வாழ்த்து அட்டை.

நர்மதா,
வாழ்த்து அட்டைகள் நல்ல அழகாக இருக்கினறன
வாழ்த்துக்கள்.
செபா.

எல்லா வாழ்த்திதழ்களுமே அழகாக இருக்கின்றன நர்மதா. :-)
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

emposs patri thelivaga sollunga,,,,,,,
eppai seivathu,aluminiya boil patri thelivaga sollunga,,,,,,,