சிக் பஃவ் சோசேச் ரோல்

தேதி: March 18, 2009

பரிமாறும் அளவு: (1 - 3) நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோசேச் (கோழி)(நீளமானது) - 4
முட்டை (வெள்ளைக்கரு) - ஒன்று
பஃவ்பேஸ்ரி சீட்(ப்ரெஷ்) - ஒரு பாக்கெட்


 

ஒரு பலகையின் மேல் பஃவ்பேஸ்ரி சீட்டை(ப்ரெஷ்) விரித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக்கருவை போட்டு நன்றாக அடித்து வைக்கவும்.
சோசேச்சை(கோழி) கத்தியால் 2 அல்லது 3 முறை கீறி விடவும்(இல்லாவிட்டால் சுற்றிய ரோலில் உள்ள சோசேச் சுற்றை விட்டு வெளியேறிவிடும்).
விரித்து வைத்த பஃவ் பேஸ்ரி சீட்டின் (ப்ரெஷ்) மேல் சோசேச்சை (கோழி)ஒன்றை எடுத்து வைத்து (இரண்டு அல்லது மூன்று) முறை நெருக்கமாக இருக்குமாறு நன்றாக சுற்றவும் (ஒரு பஃவ் பேஸ்ரி சீட்டில்(ப்ரெஷ் (3 அல்லது 4 ரோல் செய்யலாம்).
சுற்றியதின்(ரோலை சுற்றுவதை போலசுற்றவும்) பின்பு அதன் கடைசி பகுதியை அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளைகருவினை பூசி ரோலை நன்றாக ஒட்டவும்.
ஒட்டிய ரோல்களை ஒரு தட்டில் வைத்து அடுக்கி பேக் செய்யவும் (250 டிகிரி C யில் (20 - 30)நிமிடங்கள்)(நேரமும் பாகையும் ஒவ்வொரு அவனுக்கிடையே வித்தியாசம் காணப்படும்).
பேக் செய்தவற்றை அவனை விட்டு சிக் பஃவ் சோசேச் ரோலை வெளியில் எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.


சிக் பஃவ் சோசேச் ரோலானது சுவையானதும் கொழுப்பு வைட்டமின் போன்ற பல சத்துகள் நிறைந்ததும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடியதும் செய்வதற்கு இலகுவானதும் ஜெர்மனிய மக்கள் மிக விரும்பி உண்ணும் உணவாகும். எச்சரிக்கை- இருதயநோயாளர், சோசேச் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - முட்டைமஞ்சள்கரு, தயி,ர் மிளகாய்த்தூள், உப்பு கலந்து அதில் சோசேச்சை(கோழி) நனைத்து ரோல் செய்யலாம் அல்லது ஏதாவது சோஸில் நனைத்தும் செய்யலாம். கவனிக்க வேண்டிய விசயங்கள் - எல்லாவகையான (நீளமான, கட்டையான, தடிப்பான, மெல்லிய,வட்டமான, சதுரமான) சோசேச்சிலும் செய்யலாம். ஆனால் சோசேச்சின் வடிவத்திற்கேற்ப இந்த ரோலின் வடிவம் மாறும்.

மேலும் சில குறிப்புகள்