வாழைப்பூ வடகம்

வழங்கியவர் : Mrs vathsala Na...
தேதி : புதன், 18/03/2009 - 14:22
ஆயத்த நேரம் : 3 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
பரிமாறும் அளவு :
- வாழைப்பூ - 1
- உளுந்து - 1 கப்
- சின்ன வெங்காயம் - 250 கிராம்
- சீரகம் - 1 மேசைக்கரண்டி
- பெருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 10 - 15
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
- உப்பு - தேவையான அளவு
- உளுந்தை 3 மணி நேரம் ஊறவிடவும். வாழைப்பூவை பொடியாக நறுக்கவும்.
- வெயிலில் 2 மணி நேரம் உலரவிடவும். மிளகை பொடியாக அரைக்கவும்.
- மிளகாயை அருவல் நொருவலாக அரைக்கவும். வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கவும். உளுந்தை கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின்பு அரைத்த உளுந்துடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக அரைத்த மிளகு, மிளகாய், பெருஞ்சீரகம், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக குழைக்கவும்.
- சிறிய உருண்டைகளாக உருட்டி மேல் சிறிதளவு அமத்தி தட்டையாக்கி ஒரு ரேயில் அடுக்கி வெயிலில் காயவைக்கவும்.
- நன்றாக காயும் வரை 5 அல்லது 6 நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
- இதை டப்பாவில் போட்டு வைத்து நீண்ட காலம் வைத்துப் பாவிக்கலாம்.
- தேவையான போது எடுத்து பொரித்து சோறு, புட்டுடன் சாப்பிடலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
13 sec முன்பு
32 sec முன்பு
1 min 39 sec முன்பு
2 நிமிடங்கள் 36 sec முன்பு
5 நிமிடங்கள் 36 sec முன்பு
5 நிமிடங்கள் 43 sec முன்பு
9 நிமிடங்கள் 32 sec முன்பு
12 நிமிடங்கள் 5 sec முன்பு
15 நிமிடங்கள் 51 sec முன்பு
20 நிமிடங்கள் 16 sec முன்பு