க்ரீன் ஃபிஷ் கறி

தேதி: March 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

இந்த க்ரீன் ஃபிஷ் கறி குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

 

மீன் - 300 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 அல்லது 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
மிளகாய் - 2 அல்லது 4
பூண்டு - 2 பல்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு - 6
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் தாளிக்க - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 100 மில்லி
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி இலை - 3 மேசைக்கரண்டி


 

மீனை தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு, சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வைத்திருக்கவும்.
மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், 2 மேசைக்கரண்டி மல்லி இலை, முந்திரி, தேங்காய், பூண்டு, மல்லித் தூள், சீரகம், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதினை போட்டு நன்கு வதக்கவும்.
அதன் பிறகு சிறிது தண்ணீர் மற்றும் மல்லி இலை சேர்த்து கொதிக்க விடவும். அதில் தயிரை ஊற்றி கலக்கி விடவும்.
ஊற வைத்திருக்கும் மீனை இந்த கலவையில் போட்டு பிரட்டி விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுப்பின் தீயை மிதமாக வைத்து மீன் வேகும் வரை மூடி வைத்திருக்கவும்.
10 நிமிடம் கழித்து மீன் வெந்ததும் இறக்கி வைக்கவும்.
சுவையான க்ரீன் ஃபிஷ் கறி ரெடி. இதில் உள்ள மீன் சாப்பிட ருசியாக இருக்கும். இதனை அரிசி மாவு ரொட்டி, சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம். எப்பொழுதும் ஃப்ஷ் குழம்பு, ஃப்ஷ் ஃப்ரை என்று சமைப்போம். ஒரு மாறுதலுக்கு நிறைய மீன் இருக்கும் போது எப்பொழுதாவது இப்படி சமைத்தும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Aaasiaka SImply superb..Wat a color!!Wat a color!!!!!!Intha sunday try panren...Kalakunga...:-)

வினு

வினு

ஆசியா தாங்கள் செய்து காட்டிய கிரீன் பிஷ் கரி பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது இதில் மீனை பச்சையாக போடாமல் பொறித்து போடலாமா

ஆசியா அக்கா பாக்கவே சுப்பரா இருக்கு. இங்க இவருக்கு கலர் சாப்பாடு/ஐட்டம்ன்னாலே ஓடிடுவார்.. யாராவது வந்தா செய்து பாக்கனும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பின்னூட்டதிற்கு மிக்க நன்றி.பொரித்தும் போடலாம்.இந்த ஐடியா நல்ல இருக்கே,சுவை இன்னும் நல்ல இருக்கும்.செய்து பாருங்க,இது இயற்கையான மல்லி,பச்சை மிளகாய் கலர் தான்.கிங் ஃபிஷ்,அமூர் மீனில் மற்ற மீனிலும் செய்யலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா,
மிகவும் கலர்புல்லாக இருக்கு…சூப்பர்…
அன்புடன்,
கீதா ஆச்சல்

பார்த்து கருத்து சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா,
ரெஸிப்பி ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு. தெளிவான படங்கள். கடைசியில் பிரெஸெண்டேஷன் ரொம்பவே அழகா கொடுத்திருக்கிங்க! நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

உனக்காக்வே சமைத்து அசத்தலாம் -9 தில் எழுத்து உதவி பக்கம் போய் ஸ்ரீ எப்படி எழுதுவது என்று தெரிந்து கொண்டேன்.பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி.ரொட்டியுடனும் ப்ரெச்ண்ட் பண்ணி அனுப்பி இருந்தேன்,அட்மின் இதை செலக்ட் பண்ணி வெளியிட்டு இருக்கார்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா நேற்று உங்கள் குறிப்பில் கீரின் ஃபிஷ் கறி செய்தேன் மிகவும் நல்ல வித்தியசமான டேஸ்ட் மற்றும் கலர்புல் மீன் சாப்பாடு நடந்தது மிக்க நன்றி

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மஹா மிக்க மகிழ்ச்சி.யுவன் சாப்பிட்டானா?(பெயர் நினைவு வந்து விட்டது)நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மீன் ரெசிப்பி நன்றாக இருக்கு.
மீனை பொரித்தும் போடலாம் என
சொல்லியிருக்கீங்க.பொரித்துபோட்டால்
அதிலுள்ள க்ரேவியின் சுவை மீனில் கிடைக்குமா..?

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

mrs.syed நலமா?இப்ப தான் உங்க profile பார்த்தேன்.கிரேவியின் சுவை மீனில் கிடைக்கும்,மீன் ஈசியாக மசாலாவை absorb பண்ணிக்கொள்ளூம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியாஅக்கா எப்படியிருக்கீங்க.?நான் நலம்.
நீங்கள் பதில் தந்ததற்கு நன்றி அக்கா.
நான் இப்படி செய்துப் பார்த்து சொல்கிறேன்.
நான் அறுசுவைக்கு புதுசு.ஆனால் 3மாதமாக
சைலண்டாக பழைய தெரெட்களையெல்லாம்
வாசித்து வருகிறேன்.உங்கள் சொந்த ஊர் எது என தெரிந்துக் கொள்ளலாமா...?

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

ஷாஹுலா,எனக்கு நெல்லை தான்.உங்களோடு பேசியது மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு சகோதரி ஆசியா உமர்

எதொ படம் பார்த்து கதை சொல்வது போல் இதை பார்த்து செய்து இருக்கிறேன். மதியம் சாப்பிட்டு விட்டு சொல்கிறேன்....பதில் வரவில்லை என்றால்...தவறாக நினைக்க வேண்டாம்...இன்னும் நிறைய நான் சமைக்க கற்று கொள்ள வேண்டும் என்று வைத்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

hi akka romba romba nalla iruku, naan samayalil konjam makku thaan, anal intha fish kuzhambu supera banniden. oru nall kuda yen husband yenna kuzhambu nalla irukuni sonnathu kidaiyaathu, anal intha kuzhamba sapdu romba nalla irukuni sollidanga. antha thanks ungaluku than sollanum. romba thanks

anbudan soniya

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செய்த்து பார்த்தீர்களா?சார்.மகிழ்ச்சி .உப்பு சரியாக போடத்தெரிந்துவிட்டால் சாப்பிட்டு விடலாம்.இன்னும் மற்ற அறுசுவை கூட்டாஞ்சோறு மூத்த தோழிகள் சமையல் பாருங்க.நல்ல இருக்கும்.உங்க profile பார்த்தேன்.விமானி என்று இருந்தது.அப்புறம் இதர திறன்கள் வித்தியாசமான பயனுள்ளவை,உங்க மறைமலைரகசியம் த்ரெட் பார்த்தேன்,புரிகிற மாதிரியும் இருக்கு.புரியாத மாதிரியும் இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு சகோதரி ஆசியா உமர்

ஞாயிற்று கிழமை என்பதால் காலையிலே கீரீன் பிஷ் கறியை செய்து வைத்து விட்டு குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றி வந்து கடைசியில் பொறுக்க முடியாம 1230 கே போட்டு ஒரு வெட்டு வெட்டிடேன்,... ஸ்..சுப்பர் ஆக இருந்தது. நன்றி

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

செய்து பின்னூட்டம் தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஆசியா அக்கா அஸ்ஸலாமு அழைக்கும்
நல்ல இருக்கீங்களா நான் இந்த ரெசபி செய்தேன்

ரொம்ப நல்லா இருந்தது உங்கள் பட்டர் சிக்கன் அதும் நல்லா இருந்தது

என்றும் அன்புடன்
நஸ்ரின்

வாலைக்கும் ஸலாம்.உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

I tried most of your recipes......all came out very well. this one also came so good.... my hubby and kids liked it..thanks for the recipe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.