பொரிவிளங்கா உருண்டை

தேதி: March 19, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மாவு - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
வேர்க்கடலை - 1 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
தேங்காய் - 1/4 மூடிக்கும் குறைவாக
வெல்லம் - 3/4 - 1 கப்
சுக்கு தூள் - 1/4 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் தேங்காயினை சிறிய சிறிய துண்டுபல்லுகளாக வெட்டி கொள்ளவும்.
வெட்டி வைத்துள்ள தேங்காயினை நெய்யில் போட்டு வறுத்து கொள்ளவும்.
பாசிப்பருப்பினை வெறுமனே கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த பாசிப்பருப்பினை சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
வேர்க்கடலையினை வறுத்து தோலினை நீக்கவும்.
இப்பொழுது வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அரைத்த பாசிப்பருப்பு, நெய்யில் வறுத்த தேங்காய்பல், சுக்கு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து பாகு வரும் வரை வைக்கவும்.
பாகு வந்த உடன் கலந்து வைத்து இருக்கும் பொருட்களினை போட்டு கலக்கவும்.
பின்பு இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி அரிசி மாவில் பிரட்டி எடுக்கவும்.
இப்பொழுது சுவையான பொரிவிளங்கா உருண்டை ரெடி.


மேலும் சில குறிப்புகள்