manohari thalika matrum arusuvai tholigal... - Guide me plssss

Manohari, Thalika உங்கள் பதிவை பார்த்தேன். உங்களிடம் என் சந்தேகத்தை கேட்கிரேன். முகம் தெரிந்த தோலிகளிடம் கேட்க கூச்சமாக உள்ளது.என் சந்தேகத்தை இங்கு கேட்கலாமா என்று தெரியவில்லை. தவறு இருந்தால் மண்ணித்து விடுங்கள் plssss..

எனக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகி விட்டது.காதல் திருமணம். இன்று வரை ஒருவரை ஒருவர் விட்டுகுடுத்து இன்பமாக வாழ்கின்ரோம். but இதுவரை முலுமையான தாம்பதிய வாழ்கையில் இடுபடவில்லை. காரணம் நான்மட்டும் தான். திருமணம் ஆன புதிதில் எனக்கு இந்த விஷயம் பிடிகவில்லை. அப்போதும் பொருத்து போனார் என் கனவர். பிறகு பிடித்தது. இப்போது என்னால் இடுபடமுடியவில்லை, மனதில் ஒரு பயம்.பயத்தின் காரணம் அப்போது ஏற்படுகின்ற வழி. அது ஏன் அந்த வழி, எனக்கு மட்டும்தான் அந்த வழியா, இல்லை யெல்லா பென்களும் இதை தாண்டி வந்தவரா, இன்று வரை try பன்றோம்.அது ஏன் எங்களுக்குள் முலுமையாக நடக்கவில்லை. நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். இதுவரை அவருக்கு நான் இந்த சந்தோசத்தை குடுக்கவில்லை. என்னை திருமணம் செய்ததற்காக எத்தனை நாட்களுக்கு அவருக்கு இந்த தண்டனை. அழுகைதான் வருகிரது. எனக்கு 10th படிக்கும்போதே இடுப்பு வழி இருந்தது. என்னால் 10 நிமிடதிற்க்கு மெல் நேராக படுக்கமுடிவதில்லை. இதுவும் ஒரு காரணம்.என்னால் அவருடன் ஒன்றாக இறுக்க முடியுமா? அந்த வழியை தங்கிகொல்ல என்ன செய்யவேண்டும். எப்போது குழந்தை என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். சிரிப்பை மட்டும் பதிலாக சொல்லிவருகிறேன். 10 மாதங்கள் மூடிவைத்த சுமையை அருசுவை தோழிகளிடம் கொட்டி விட்டேன். தயவுசெய்து பதில் சொல்லுங்கள். Pls forgive me if there is any mistakes

வணக்கம்.
நான் இது போன்ற விசயத்தை பேச ரொம்பவே கூச்சப்படுவேன்.ஆனால் நீங்கள் எழுதியதை படித்து விட்டு , பதில் போட வேண்டும் என்று தோன்றுகிறது.
நீங்கள், இந்த பதிவை கர்பிணி பெண்கள் பக்கத்தில் போட்டால், நிறைய தோழிகள் பதில் தருவார்கள்.
எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.எனக்கு தெரிந்தவரை, இந்த வலியை எல்லோரும் தாண்டி வந்தவர்கள் தான். ஒரு சிலருக்கு இருக்காது.எனக்கு இதுக்கு மேல் publicஆ எழுத கூச்சமாக உள்ளது. நீங்கள் உங்கள் idயை கொடுத்தல், மிகவும் தெளிவாக அனுப்புகிறேன்.உங்கள் உண்மையான idயை கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.வேறு ஒரு புதிய id வேண்டுமானால் கொடுங்கள்.

எப்படி இருக்கீங்க? உங்கள் சந்தேகத்தைதானே கேட்டுள்ளீர்கள் அதற்கு மன்னிப்பெல்லாம் எதற்கு, உங்ககிட்ட எனக்கொரு சந்தேகம் திருமணமான புதிதில் இந்த விசயம் ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை? பத்து மாசமாகியும் முழுமையாக!!! தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை ( என்னங்க நீங்க பத்து மாசத்த வேஸ்ட் பன்னியிருக்கீங்க ரொம்ப மோசம்....பாவங்க உங்க கணவர்) அதற்கு காரணம் வலி என்றும் கூறியுள்ளீர்கள் ஆனால் அதற்கு காரணம் வலியாக இருக்க முடியாது என்றே நினைக்கின்றேன், மேலும் உங்களுக்குள் இருக்கும் பயம் அல்லது கூச்சமாகக்கூட இருக்கலாம். ஆரம்பத்தில் தான் நீங்க கூறியிருப்பதுப் போன்ற வலி இருக்கலாம் அதுகூட ஒருசில முறைகளுக்கு பிறகு வலியாவது கிலியாவது. அதை வலி என்பதற்கு பதில் அசெளகரியம் என்று கூறுவது தான் பொருத்தமாய் இருக்கும். உங்களுக்கு பிறகு பிடித்தது என்று கூறியுள்ளீர்கள் அது தான் உண்மையான ஒன்று. ஆகவே உங்களுக்கிருக்கும் வலிக்கு வேறு ஏதாவது மருத்துவ ரீதியான காரணமிருக்கலாம். நீங்க குறிப்பிட்ட இடுப்பு வலிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே கருதுகின்றேன். முதலில் உங்க மனதிலிருக்கும் தேவையற்ற சந்தேகம் நீக்கப்பட வேண்டும்.இனியும் தாமதியாது மருத்துவரிடம் சென்று சந்தேகத்தை தீர்த்துக் கொள்வது தான் நல்லது. கட்டாயம் உங்க கணவரையும் உடன் அழைத்துச் சென்றால் தான் முழு பயனையும் பெறமுடியும். மற்றவை உங்கள் பதில் கண்டு நன்றி.

நன்றி karkav

உங்கள் பதிலுக்கு. எனக்கும் இதுல கேட்க கஷ்டமா இருந்தது. உங்கள் சிரமத்துக்கு மன்னிக்கவும். my id esathyadevi@yahoo.com. Pls reply..

நன்றி manohari

உங்கள் பதிலுக்கு. ஆரம்பத்தில் பிடிகாதற்கு காரணம் திருமணமாகி 10 நாட்களில் US வந்துவிட்டேன். அம்மா அப்பா அக்கா அனைவரைஉம் பிரிந்துவிட்டோம் என்ற கவலை.அழுகையில் 3 மாதங்கள் போய்விட்டது. இப்போது அனைவருமாக என் கனவர் தெரிகிரார். US'la இருபதினால் எந்த டாக்டரிடம் செல்வது என்பது மிகவும் குழப்பமாகவே உள்ளது. நீங்கள் கூறியதில் வலியாவது கிலியாவது இந்த வார்த்தையை நான் ஆயுதமாக எடுத்து கொள்கிறென். மிகவும் நன்றி.

இந்த கேள்வியை இப்போது கர்பிணி பெண்கள் பக்கத்தில் போட முடியுமா? எப்படி போடுவது என்று சொல்லுங்களேன்.

வணக்கம்
copy, pasteபண்ணிதான் அங்க போட முடியும்.இன்னொரு புதிய பதிவை அங்க போடுற மாதிரிதான் இருக்கும்.

இந்த கேள்வி அடிக்கடி குடும்ப மலரில் வருவதை படித்திருக்கிறேன் அங்கு மருத்துவர்கள் கொடுக்கும் விடையில் அடிப்படையில் நான்கு முக்கிய காரணங்கள்
1)தேவையில்லாத குழப்பம் மற்றும் பயத்தால் உறுப்புகள் இறுகி விடுதல்
2)பெண்குழந்தைகளுக்கு ஹைமென் எனப்படும் உள் இருக்கும் ஒரு வகை தோல் தாம்பத்தியத்தில்போது கிழிந்துவிடும்..அது சில பிள்ளைகளுக்கு சின்ன வயதில் விளையாட்டின்போது போய்விடும் அல்லது அது இல்லாமலேயே கூட இருக்கவும் வாய்ப்புண்டு..ஆனால் அது சிலருக்கு மிகவும் தடித்த தோலாக இருப்பதால் தாம்பத்தியத்தின்பொழுது மிகுந்த கஷ்டம் ஏற்படும்..அது மிகுந்த வலியை உண்டாக்கும்
3)பெண்களை தாம்பத்திற்கு முன்பே தயார்படுத்த வேண்டிய வேலை கணவன்மார்களை சேர்ந்தது அது சரிவர இல்லாததால் தயாநிலையில் வருவதற்கு முன்பே உறவுகொள்வதால் ஏற்படும் வலி.ஆனால் பத்துமாதமாக இது நடக்குமா என்பது சந்தேகமே
4)அல்லது சிறுவயதில் ஏற்பட்ட ஏதாவதொரு கசப்பான சம்பவம் மனதை வாட்டிக் கொண்டிருப்பதால் கூட இப்படி ஏற்படலாம்

நானும் இதனைப் பற்றி அதிகம் படித்ததில்லை..எல்லா வராமும் குடும்ப மலர் படிப்பேன் அதில் இதுவெல்லாம் எழுதியிருக்கும்..தவறா என்றும் எனக்கு தெரியவில்லை
வெறும் பதிலால் மட்டும் உங்கள் ப்ரச்சனை தீரப் போவதில்லை..நல்ல ஒரு மருத்துவரை இனியும் காலம் கடத்தாமல் சென்று காண்பது நல்லது...
மிகசிறிய சில ப்ரச்சனைகள் சரிசெய்ய கூடிய ப்ரச்சனைகளை தேவையில்லாமல் நீட்டி நீட்டி நாமும் மனாழுத்ததிற்கு ஆளாகி கணவரையும் திருப்திபடுத்த முடியாமல் போவதை விட உடனே ஒரு மருத்துவரை கண்டால் இருவரையும் பரிசோதித்து சொல்வார்....நிச்சயம் நீங்களும் எல்லோரையும் போல இனிய இல்லறத்தை அனுபவிப்பீர்க.

மேலும் சில பதிவுகள்