ப்ரெட் பரோட்டா

தேதி: March 20, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பூரணத்திற்கு:
ப்ரெட் துண்டுகள் - 3
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோலுரித்துக்கொள்ளவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்


 

ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு நெய் தேவையான அளவு உப்பு போட்டு சப்பாத்திக்கு பிசைவதுப்போல் பிசையவும்.
வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் போட்டு லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்துள்ள உருளைக்கிழங்கு, வதக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, சீரகத்தூள் தேவைக்கேற்ப உப்பு மற்றும் ப்ரெட் துண்டுகளை தன்ணீரில் நனைத்துப்பிழிந்து இந்த கலவையுடன் கலந்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பிசைந்து வைத்திற்கும் மாவில் கொஞ்சம் எடுத்து சப்பாத்தி பரத்துவதுப்போல் பரத்தி அதன் நடுவில் ப்ரெட் கலவை உருண்டையை வைத்து மூடி லேசாக பரத்தவும்.
பரத்திய பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் நெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்து சூடாகவே பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மஹா எப்படி இருக்கீங்க?சமைத்து அசத்தலாம் மூலம் உங்க ரெசிபியில் இதை ட்ரை பண்ணேன்.ரொம்ப நல்லா வந்தது.என் குழந்தைகளும்,அவரும் விரும்பி சப்பிட்டாங்க.அடுத்த ரெசிபியை டிரை செய்து பின் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

உங்கள் பிரெட் பரோட்டா, நேற்று இரவு செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது மஹா.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்