சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன்

image

வழங்கியவர் : Mahalakshmiprag...

தேதி : வெள்ளி, 20/03/2009 - 11:53

ஆயத்த நேரம் : 30 min

சமைக்கும் நேரம் : 20 min

பரிமாறும் அளவு : 4

3
3 votes
Your rating: None
 

 

  • கோழி - 1/2 கிலோ
  • வெங்காயம் - 1
  • சோயாசாஸ் - 1/2 கப்
  • வினிகர் - 1/4 கப்
  • நல்லமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
  • அஜினோமோட்டோ - 1/4 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
  • கார்ன்ஃப்ளார் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • மைதாமாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி - 1 நீளத்துண்டு
  • பச்சைமிளகாய் - 3
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 

  • கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை மிகப்பொடியதாக நறுக்கிகொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கழுவிய கோழித்துண்டுகளைப் போட்டு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம், நல்லமிளகுத்தூள், மஞ்சள்தூள், சோயாசாஸ், வினிகர், அஜினோமோட்டோ, நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்துள்ள கோழித்துண்டு கலவையை 1 மணி நேரம் கழித்து அப்படியே எல்லாவற்றையும் குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 1 விசில் விட்டு அரைவேக்காடு வேகவைத்து குக்கரை இறக்கவும்.
  • பின்னர் கார்ன்ஃப்ளார்மாவு, மைதாமாவு இவற்றை ஒன்றாக போட்டு சிறிது தண்ணீர் விட்டு கட்டிதட்டாமல் கரைத்து வைக்கவும்.
  • வாணலியில் பொரிக்கத்தேவையான அளவு எண்ணெய் விட்டு அது காய்ந்ததும். குக்கரில் இருந்து கோழித்துண்டுகளை மட்டும் எடுத்து கரைத்துவைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் இரண்டிரண்டாக போட்டு நன்றாக பொரித்து சிவந்ததும் எடுக்கவும்.
  • வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிவக்க வறுக்கவும்.
  • அதில் பொரித்தெடுத்த கோழித்துண்டுகளை போட்டு பிரட்டி விட்டு, குக்கரில் மீதியுள்ள கிரேவியும் ஊற்றி எண்ணெய் தெளிந்து வரும் போது இறக்கவும்.
  • பரோட்டா, சப்பாத்தி இவற்றுடன் சூடாக இருக்கும்போதே பரிமாறவும்.