ப்ரெட் தயிர் வடை

தேதி: March 20, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் துண்டு - 5
தயிர் - 1 கப்
கேரட் துருவல் - 1/2 கப்
மல்லித்தழை - 1/4 கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு தண்ணீர் நனைத்து தண்ணீரை பிழிந்து விடவும். எல்லா ப்ரெட்டினையும் இதேப்போல் செய்து ப்ரெட் எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடுகை மட்டும் தாளிக்கவும் ஒரு பாத்திரத்தில் தயிர், கேரட் துருவல், மல்லித்தழை தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை காயவைக்கவும். பிசைந்து வைத்துள்ள ப்ரெட் கலவையில் இருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கையில் வைத்து தட்டி காய்ந்த எண்ணெயில் ஒவ்வொரு உருண்டையும் தட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.
ஒரு தட்டில் பொரித்த ப்ரெட் வடையை வைத்து அதன் மேல் தயிரை ஊற்றிப் பரிமாறவும்


சாப்பிடுவதற்கு முன்பு தயிரை விட்டால் போதும்.

மேலும் சில குறிப்புகள்