ஷீர் குருமா

தேதி: March 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - அரை லிட்டர்
நொறுக்கிய சேமியா - கால் கப் (அ) ஒரு கைப்பிடி
ஏலக்காய் - 3
பாதாம், முந்திரி - 25 கிராம் (அரைக்க)
சர்க்கரை - அரை டம்ளர்
மில்க் மெயிட் - சிறிய டின் (அ) இரண்டு குழிக்கரண்டி
பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா ஐந்து (வறுத்து சேர்க்க)
கிஸ்மிஸ் பழம் (கருப்பு) - எட்டு
நெய் - மூன்று தேக்கரண்டி
குங்குமப்பூ - ஆறு இதழ்


 

ஷீர் குருமா செய்ய தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி ஏலக்காய் சேர்த்து சற்று திக்காக ஆகும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடி சேமியாவை போட்டு கருக விடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள முந்திரி மற்றும் பாதாமை அரைத்து வைக்கவும். மீதமுள்ள முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும். கடைசியாக கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
பாலில் அரைத்த முந்திரி, பாதாம் விழுதினை சேர்த்து காய்ச்சவும். அதனுடன் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து கொதிக்க விடவும்.
பால் சிறிது நேரம் கொதித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.
அதன் பின்னர் பாலுடன் சர்க்கரை மற்றும் மில்க் மெயிடை ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் கிளறி விட்டு கொதித்ததும் இறக்கவும்.
கடைசியாக அதன் மேல் சாஃப்ரானை தூவி விடவும். சுவையான ஷீர் குருமா ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

இது பாகிஸ்தானியர்களின் பாரம்பரிய ரிச் பாயாசமாகும். இது நம் ஊர்களிலும் இஸ்லாமிய இல்லங்களில் செய்வார்கள். ருமானி சேமியா என்று சிறியதாக இடியாப்பம் பந்து போல் பாக்கெட்டுகளில் கிடைக்கும். அது வெள்ளையாக இருக்கும், ஆகையால் அதற்கு நெய் நிறைய ஊற்றி பொன் முறுவலாக பொரித்து எடுக்க வேண்டும். பாகிஸ்தானி சேமியா, வருத்ததே கிடைக்கிறது அது லேசாக நெய்யில் வருத்தால் போதும். அடிக்கடி வீட்டில் செய்வதாக இருந்தால் ஏலக்காய் கொதித்த பாலில் சேமியாவை (ரோஸ்டட்) அப்படியே சேர்த்து கொஞ்சம் பாதாம் முந்திரி அரைத்து ஊற்றி மில்க் மெயிட், சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். இதில் கருப்பு கிஸ்மிஸ் போடுவதால் பார்க்க கலர் புல்லாக இருக்கும். மில்க் மெயிட் ஊற்றியதும் அப்படியே கொதிக்க விட்டால் அடி பிடித்து விடும். இதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் எல்லாம் அரைத்தே சேர்க்கவும். சேமியாவும் பொடியாக இருப்பதால் கெட்டியாக ஸ்பூனில் வைத்து ஊட்டி விடலாம். இதை விருந்தாளிகளுக்கு கொடுக்கும் போது நெய்யில் வறுத்தவைகளை அவ்வப்போது தூவி கொடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும். சாப்பிடும் போது மொருமொருப்பாக இருக்கும்.

<br />
<img src="files/pictures/semiya.jpg" alt="semiya.jpg" />


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிகவும் நன்றாக இருக்கின்றது…பார்க்கவே சூப்பர் ஷீர் குருமா….
நாங்களும் இப்படி தான் செய்வோம்…இதன் செய்முறையை எங்களுடைய முஸ்லீம் நண்பர்களிடன் இருந்து கற்று கொண்ட்து…சென்னையில் இந்த சேமிய முன்பு எல்லாம் triplicaneயில் மட்டும் தான் கிடைக்கும்…எனக்கு இங்கு யூஸில் நீங்கள் சொல்வது போல பாகிஸ்தானிய கடைகளில் கிடைக்கின்றது.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஜலீலாக்கா நான் பொய் சொல்லவில்லை, இந்தக் குறிப்புத் தேடிச் செய்ய வேண்டும் என்ற என் நீண்டநாள் கனவு இனி நிறைவேறப்போகிறது. இதே சேமியாவில் இதேபோல்தான் ஒன்று பக்கத்து வீட்டிலிருந்த தெலுங்கு கதைக்கும் ஒருவர் எனக்கு முன்பு செய்து தந்தார், அந்த சுவை என் வாயில் இப்பவும் இருக்கிறது. சேமியா வாங்கியதும் உடனே செய்துவிட்டுச் சொல்கிறேன். சேமியா மட்டும் பக்கத்தில் வாங்க முடியாது, தூரம் போக வேண்டும்.என் கணவருக்கு இது சரியான விருப்பம், சொன்னால் இப்பவே வெளிக்கிட்டுவிடுவார் கடைக்கு.

ஜலீலக்கா, தேவையான பொருட்களில், சேமியாவின் அளவு போடப்படவில்லை, அட்மின் தவறவிட்டாரோ/ நீங்கள் தவறவிட்டீங்களோ தெரியேல்லை திருத்தவும்.

சேமியாவின் வேறு பெயர்கள் தெரிந்தால் சொல்லுங்கோ, தமிழ்க் கடைகள் இல்லை, பாகிஸ்தான் கடைகளே உண்டு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Where is the vermicilli measurement in the ingredients? Jaleela madem please specify the measurement..

கைக்கு நொருக்கிய சேமியா ஒரு கைபிடி போட்டால் போது செய்து முடிந்து மூடி வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் நல்ல கெட்டியாகி நிறைய பொங்கிவரும்.

முந்திரி இரு முறை பதிவகி இருக்கு, அதிரா சிறிது குழப்பம் ஆகையால் தான் இப்படி,
கீதா ஆச்சல் கிட்ட கேளுங்கள் அவர் தான் போன வாரம் அதை ஹல்வா வாக கிணிடினார்.எந்த கடையில் எந்த பேரில் வாங்கினார் என்று.

நான் பாக்கெட் பிரித்து போட்டு விட்டேன் இல்லை என்றால் பார்த்து சொல்வேன், இனி அடுத்த முறை கடைக்கு போகும் போது தான் பார்த்து வரனும், கூட்டன்சோறில் என் குறிப்பில் அந்த சேமியாவின் படம் போட்டு உள்ளது அட்மினிடம் அந்தையும் இத்துடன் போட சோன்னேன். கொஞ்சம் அதையும் பாருஙக்ளேன்.
ஜலீலா

Jaleelakamal

நல்ல அருமையாக செய்து இருக்கீங்க.செய்து போட்டொ எடுத்து அனுப்புவதே அழகு தான்.உங்களிடம் இருந்து தான் இந்த ஆர்வம் என்னை தொற்றிக்கொண்டது.பாராட்டுக்கள்.மெல்லிய கம்பி போன்ற வறுத்த சேமியா பாகிஸ்தான் ப்ராடக்ட் .மெஹ்ரன் தான் நான் உபயோகிக்கிறேன்.ரொம்ப ரிச்சாக செய்து இருக்கீங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஷீர் குருமா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஆசியா.

இது என் சின்ன பையனுக்கு பிடிக்கும் கொஞ்சமா பால் காச்ய்ச்சி, ஒரு மேசை கரண்டி போட்டு அவனுக்கு மட்டும் சில நேரம் செய்வேன்.
காலையில் ஸ்கூல் போகும் முன் கொடுக்க, நெய் , முந்திரி எல்லாம் போடாமல் மில்க் மெயிட் சிறிது கலந்து.
இதில் இன்னும் பிஸ்தா சேர்த்து நெய்யில் வருத்து செர்த்தால் இன்னும் கலர்புல்லா இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

அதிரா பிரியா தவற விட்ட பொருளை சேர்த்தாச்சு.

சொன்னதும் உடனே இனைத்த பாபுவிற்Kஉ மிக்க நன்றி.

ஜலீலா

Jaleelakamal

சேமியா படம் இணைத்தாயிற்றா? சூப்பர்.இதை இதைத்தான் நான் உபயோகிக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.