குண்டூர் சிக்கன்

தேதி: March 21, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

சிக்கன் - அரைக்கிலோ
காய்ந்த சிவப்பு மிளகாய் - 8-10
முழு மல்லி - 3 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - ஒன்றரை ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன் (ஏலம் பட்டை கிராம்பு கலவை)
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 150 கிராம்
புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும். சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி நீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.
காய்ந்த மிளகாய், முழுமல்லி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும்.
ஆறியவுடன் பொடி செய்து, பின்பு அத்துடன் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும்,.
ஒரு பேனில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா சேர்க்கவும்.
நன்றாக வதங்கி மணம் வந்தவுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த மசாலா, தயிர் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு சிக்கனை சேர்த்து பிரட்டி விடவும். சிறிது கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் சிம்மில் வேக விடவும். அடிக்கடி பிரட்டி விடவும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும். சிக்கன் வெந்தபின்பு மல்லி இலை தூவவும்.
சூப்பர் சுவையுள்ள குண்டூர் சிக்கன் ரெடி. இதனை ப்ளைன் ரைஸ், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறினால் அசத்தலாக இருக்கும்.


காரம் அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம். இதன் சுவை அனைவரையும் அசத்தும் என்பத்தில் ஐயம் இல்லை.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஆசியா மேடம்,தற்போது வீட்டில் தயிர் இல்லை.தயிர் இல்லாமல் செய்யலாமா அல்லது தயிருக்கு பதில் என்ன சேர்க்கலாம் என்று கூறவும்.இன்னும் அரை மணி நேரத்தில் செய்யவுள்ளேன்.தயவுசெய்து சீக்கிரம் பதில் அளிக்கவும்.

தாரளமாய் தயிர் இல்லாமல் செய்யலாம்.ரெட் சில்லி சிறிது காரம் அளவு பார்த்து சேர்க்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உடனடியாக வந்து பதிலளித்து உதவிய தங்களுக்கு மிக்க நன்றி.மேடம் இன்று மதியம் இதை தான் செய்ய போகிறேன்.செய்து பார்த்து சாப்பிடு விட்டு வந்து சொல்கிறேன் எப்படி இருந்ததென்று.

நேற்றிலிருந்து உங்களுக்கு பதிவு போடலாமென்று பார்த்தால் ம்ஹும்..முடியல.இப்ப தான் முடிந்தது.உண்மையில் சொல்றேன்,ரொம்ப டேஸ்டா இருந்தது.நேற்று மதியம் செய்தேன்,அப்போ சாப்பிடும் போது நன்றாக இருந்தது.நேற்று இரவு சாப்பிடும் போது அதை விட சுவையா இருந்தது.அசல் ஹோட்டலில் கொடுக்கும் சேர்வா போல் சுவை இருந்தது.உங்களுக்கு ஒன்னு தெரியுமா,நேற்று இரவு இந்த சேர்வாவுடன்(குண்டூர் சிக்கனுடன்) பெப்பர் சிக்கன்(கொஞ்சம் உப்பு அதிகமாகிடுச்சு) தான் சைட்டிஷ்.தங்களின் குறிப்புக்கு மிக்க நன்றி சொல்வதை விட பயனுள்ளதாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

படிக்கும்போதெ சுவையாக இருக்கின்றது,இருக்கும்.
நன்றிகள்.....

பின்னூடத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆஹா... ஆசியா சம கோழி கறி. என்னை நீங்க இன்னைக்கு பாராட்டியே ஆகனும்... ஏன்னா, நீங்க சொன்ன மசாலாவை நான் என்னிடம் இருந்த உரலில் அரைத்து சேர்த்தேன்... அத்தனை மணமாக சுவையாக இருந்தது. இந்த வாரம் பார்ட்டிக்கு இதையும் சேர்த்துட்டேன். மிக்க நன்றி ஆசியா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,மிக்க மகிழ்ச்சி.யாரும் சமைக்கலாமில் குண்டூர் சிக்கன் வரும் முன்பு செய்து அசத்தி விட்டீர்கள்.எப்ப வரும்னு தெரியலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா இந்த சிக்கன் ரெஸிப்பி சூப்பர். வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். காரம் கொஞ்சம் குறைத்துக் கொண்டேன். நன்றி உங்களுக்கு.

செய்து பார்த்து பின்னூட்டம் பார்க்கும் பொழுது அந்த மகிழ்ச்சியே தனிதான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

i made gurdur chicken its came very well i like it very much and my family members.