கோயம்புத்தூர்க்காரர்கள் இங்கு வந்து பேசலாம்

உத்தமி...!! உங்களுக்காகவும்தான் இந்த ' த்ரட்' ஓப்பன் பண்ணி இருக்கோம். அங்க ரெஸிப்பிஸ் பற்றி மட்டும் எழுதவேண்டும் என்று சொல்லுவாங்க. அதனால்தான்.......

இனி இங்கு வரிசையாக கோவைக்காரர்கள் வருவாங்க. நீங்க சந்தோஷமா உங்க ஊரைப்பற்றி பேசுங்க.

கோவையின் இன்னுமொரு சிறப்பு அம்சம் அந்த ஊர் பெண்களின் கடினமான உழைப்பு. அதற்கு அந்த ஊரின் க்ளைமேட் கண்டிஷனும் ஒரு காரணமாகவும் இருக்கலாம். கோவை மாவட்ட கிராமங்களின் சுத்தம் மனசுக்கு தெம்பாக இருக்கும். சின்னஞ்சிறு வீடுகள்கூட எப்போதுமே வெள்ளை அடிக்கப்பட்டு பளிச்சென்று இருக்கும்.

அதன் சிறப்பான இஞ்சினியரிங் கல்லூரிகள் ஊருக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. அந்த கல்லூரிகளின் அட்மாஸ்ஃபியரும், சுத்தமும், மாணவர்களை படிப்பதற்கு தூண்டுவதாக இருக்கும். என் மகன் படித்த பி.எஸ்.ஜி - யின் வளாகமும் அப்படித்தான்.

நிறைய டவுன் பஸ் வசதியா? அல்லது பெரும்பாலானோர் கார் வைத்திருப்பதால் டவுன் பஸ்களில் கூட்ட நெரிசல் குறைவா? என்று தெரியவில்லை.

சொந்த ஊர் நெல்லை என்றாலும் கோவை மீது ஒரு ஈர்ப்பு எப்பவும் உண்டு.நான் 1985-’89 அங்கு TNAU என் கல்லூரி படிப்பு .ஓரளவு எங்க கோர்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களுக்கும் அழைத்து போயிருக்காங்க.TNAU CAMPUS more than 800 acres ,காந்திபுரம்,வ்டவள்ளி,ஒண்டிப்புதூர்,மருதமலை,சாய்பாபா காலனி,சிவானந்தா காலனி,100 ஃஃபீட் ரோடு,ஒப்பணக்கார வீதி ,ஷோபா கார்னர்,என் கார்டியன் வீடு தேவபுரம் லேய் ஔட்- துரைகவுண்டர் தோட்டம்,கோவை குற்றாலம்,ஆர்.எஸ் .புரம் தான் (தினமும் அல்லது வாரம் 3 நாட்கள் விசிட்)இப்ப சட்டென்று நினைவு வருவது இந்த இடங்கள் தான்.பஸ் கூட ரொம்ப சுத்தமாக எப்பவும் புதிது போல் இருக்கும்.அங்குள்ள பெண்கள் தலை வாரி பூச்சுடி பளிச்சுன்னு எப்பவும் இருப்பது பிடிக்கும்.விருந்தோம்பல் ரொம்ப நல்ல இருக்கும்.இது மாதிரி எங்கேயும் பார்த்ததில்லை.இன்னும் எனக்கு தெரிஉந்ததை எழுதறேன்.நல்ல பாதுகாப்பாக படித்து முடித்தது எல்லாம் என் நினைவில் வருகிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நீங்க ரெண்டு பேரும் கோவையைப் பத்தி சொல்லும் போது ரொம்ப சந்தோசமா, அப்படியே பூரிப்பா இருக்கு. இப்ப நேரமில்லாததால இன்னொருமுறை இதுபற்றி நெறை....ய பேசலாம்.

அன்புடன் :-))
உத்தமி :-))

ஹாய் உத்தமி ,

நானும் கோவை தான். சாய்பாபா காலனியில் இருக்கேன். நீங்க எங்கே இருக்கீங்க உங்களை பற்றி ?

மேலும் சில பதிவுகள்