முழுக்கோழி ரோஸ்ட் (ஓவன் முறை)

தேதி: March 23, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (7 votes)

 

முழுக்கோழி - 800 - 1000 கிராம் (ப்ரெஷ் அல்லது ப்ரோசன்)
மஞ்சள் பவுடர் - அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்
சில்லி பவுடர் - அரை டீஸ்பூன்
மல்லி பவுடர் - அரை டீஸ்பூன்
சீரக பவுடர் - அரை டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ப்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
சூப் க்யூப் - 1 அல்லது உப்பு - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1
உப்பு - தேவைக்கு


 

கோழியை உள்ளே நன்கு சுத்தம் செய்து தோலோடு வைத்துக்கொள்ளவும். ஆங்காங்கு கீறி விட்டு கொள்ளவும். நன்கு அலசி மஞ்சள் தூள் போட்டு கழுவி நீர் வடிகட்டிக்கொள்ளவும்.
ஒரு பவுளில் இஞ்சி பூண்டு, சில்லி பவுடர், மல்லி பவுடர், சீரகப்பவுடர், ப்ரெட் க்ரம்ப்ஸ், தயிர், லெமன் ஜூஸ், உப்பு அல்லது சூப் க்யூப்(பொடித்தது) சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். உருளைக்கிழங்கை மெல்லியதாக சீவி வைக்கவும்.
ரெடி செய்த மசாலா மிக்ஸ் முழுக்கோழியில் நன்கு கோட் செய்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு கேஸ் ஓவனை 180 டிகிரிக்கு முற்சூடு செய்யவும். ஓவன் ப்ரூஃப் பவுளில் (பைரக்ஸ் போன்ற வகை) 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் தடவி உருளைக்கிழங்கை அடுக்கி வைக்கவும்.
பின்பு அதன் மேல் ரெடி செய்த முழுக்கோழியை வைக்கவும். பவுலை நன்கு ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு 250 டிகிரியில் ஓவனில் வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து கோழியை திருப்பி விடவும். பின்பு அரை மணி நேரம் கழித்து எடுக்கவும். கவனமாக கிளவுஸ் போட்டு எடுத்து ஈரம் இல்லாத இடத்தில் வைக்கவும். சூட்டோடு ஈரத்தில் வைத்தால் பவுள் உடைந்து விடும். பரிமாறும் வரை பவுளை அப்படியே அலுமினியம் பாயில் போட்டு மூடி வைக்கவும். அடுக்கிய உருளையும் சிக்கனும் வெண்ணெய் போல் வெந்து இருக்கும்.
சாலட், குபூஸ், ஹமூஸ், கார்லிக் பேஸ்ட் உடன் பரிமாறவும். சுவையான முழுக்கோழி ரோஸ்ட் ரெடி. கட் செய்தோ அல்லது அப்படியே பிய்த்தோ சாப்பிடலாம்.


இந்த வகை சிக்கன் காரம் குறைவாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.ஸ்பைசியாக வேண்டும் என்றால் மசாலா வகை அரை ஸ்பூனை ஒரு ஸ்பூனாக போட்டுக்கொள்ளவும். ஓவன் இல்லாதவர்கள் நாண் ஸ்டிக் தவாவில் விட்டு பொரித்து எடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தேங்க்யூ ஆசியாம்மா இந்த ரோஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது.. இரண்டு முறை செய்து அவன் விட்டு எடுத்ததும் காலி.. ஆனால் நான் இரண்டாக வெட்டி தான் செய்தேன்.. அடுத்த முறை செய்யும்போது அறுசுவை பேஸ்புக் குரூப்பில் போட்டோ போடுகிறேன்.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

hi,i try this chicken roast..really superb...
i like it...thanks..:)

enjoy the tasty meal

இதை அப்படியே பார்பிகியூ செய்தாலும் நல்லா இருக்கும்'னு நினைக்கிறேன்... சரியா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிரில் செய்தாலும் சூப்பராக இருக்கும். அப்படியே சிக்கன் வெண்ணெய் போல் இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.