முந்திரிப்பருப்பு கேக்

தேதி: March 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

முந்திரிப்பருப்பு - 100 கிராம்
நெய் - 100 கிராம்
தேங்காய் - 1
பால் - 3 டம்ளர்
சீனி - 1.5 டம்ளர்


 

தேங்காயைத் துருவவும். இதனுடன் முந்திரிப்பருப்பை சேர்த்து(இரண்டையுமே வறுக்க வேண்டாம்) மிக்ஸியில் சட்னி பதத்துக்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
காய்ச்சிய பாலில் சீனியைக் கலந்து, அடுப்பில் வைத்து, கரையும் வரை கிண்டவும்.
அரைத்த விழுதை இந்தப் பாலில் போட்டு, ஒன்றாகச் சேர்த்து, கொதிக்க விடவும்.
இன்னொரு அடுப்பில் வாணலியில் நெய் ஊற்றி, உருகியதும், இதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, பால் கோவா பதத்துக்கு சிவக்க வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments


சீதாம்மா!

செய்ய ரொம்ப ஈஸியா இருக்கு!

பாக்க ரொம்ப ரிஸ்ஸாருக்கு!

செஞ்சு பாத்துட்டு சொல்லரேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...