போர்பான் பிஸ்கட்டுகள்

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோகோ - 3 தேக்கரண்டி
மைதா மாவு - 250 கிராம்
சமையல் சோடா - அரை தேக்கரண்டி
சர்க்கரை - 120 கிராம்
கோல்டன் சிரப் அல்லது தேன் - 2 தேக்கரண்டி
பிஸ்கட்டுகளின் நடுவில் வைக்கும் கிரீம் செய்ய:
வெண்ணெய் - 25 கிராம்
பொடித்த சர்க்கரை - 50 கிராம்
கோகோ பொடி - அரை தேக்கரண்டி


 

மாவு, கோகோ பொடி, சமையல் சோடா மூன்றையும் இருமுறை சலிக்கவும்.
சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாகக் குழைக்கவும். கோல்டன் சிரப் அல்லது தேனைச் சேர்த்துக் குழைக்கவும்.
சலித்த மாவையும் அத்துடன் சேர்த்து, சிறிது பாலைத் தெளித்து பூரிமாவு போல கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
மாவினை அப்பளம் போல் இட்டு இரண்டு அங்குல நீளம் ஒரு அங்குல அகலமுள்ள பிஸ்கட் அச்சினால் வெட்டவும்.
நெய் தடவி, மாவு தூவிய தட்டில் வைக்கவும். முள்கரண்டியினால் குத்தவும். மேலே சர்க்கரையைத் தூவவும்(பொடிக்காத சர்க்கரை).
375 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
வெண்ணெய், பொடித்த சர்க்கரை, கோகோ பொடி இம்மூன்றையும் நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
பிஸ்கட்டுகள் சூடு ஆறியதும் இரண்டு இரண்டு பிஸ்கட்டுகளாக எடுத்து நடுவில் கிரீம் வைத்து ஒட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hai கரோலின் biscuit செய்வதற்கு வெண்னை maesurment குறிப்பிடவில்லை. தயவு சயிது குறிப்பிடவும்.