ஸ்பைசி ஸ்டஃப்டு சப்பாத்தி

தேதி: March 24, 2009

பரிமாறும் அளவு: மூன்று நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்,
முள்ளங்கி - 2,
காரட் - 2,
குடமிளகாய் - 1,
பெரிய வெங்காயம் - 1,
கோஸ் துருவல் - 1/2 கப்,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி,
தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி,
புதினா - ஒரு கைப்பிடி,
கொத்தமல்லி - கால் கட்டு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

கோதுமை மாவில் தேவையான உப்பு சேர்த்து கலக்கி, வெந்நீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.
முள்ளங்கி, காரட், குடமிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் மெல்லியதாக துருவி வைக்கவும்.
கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்புத்தூள், பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் துருவிய காய்கள், உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்கள் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பிசைந்த மாவில் ஒரு உருண்டை எலுமிச்சை அளவு உருண்டைகளாகவும், அடுத்த உருண்டை அதைவிட கொஞ்சம் பெரிதாகவும் மாற்றி மாற்றி உருண்டைகள் செய்யவும்.
இரண்டும் எண்ணிக்கை சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
முதலில் சின்ன உருண்டையை எடுத்து மெல்லியதாக தேய்த்து வைக்கவும். பிறகு பெரிய உருண்டையை மெல்லியதாக தேய்க்கவும்.
பெரியதாக தேய்த்த வட்டத்தின் மேல் காய்கறி கலவையை சமமாக பரப்பவும்.
சின்னதாக தேய்த்த சப்பாத்தியை அதன் மேல் வைத்து ஓரத்தை விரலால் அழுத்தி, சமோசாவுக்கு மடிப்பது போல் விரலால் சுருள் வருவது போல் மடித்து அழுத்தவும்.
ஓரம் முழுவதும் கயிறு திரித்தது போல் அழகாக வரும்.
எல்லா சப்பாத்திகளையும் இப்படியே செய்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, இருபுறமும் லேசாக சிவக்குமாறு சுட்டு எடுக்கவும்.
ஸ்பைசி ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.


இதற்கு தொட்டுக் கொள்ள துருவிய வெள்ளரி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தயிர்பச்சடி செய்தால் நன்றாக இருக்கும். விருந்துக்கும் நன்றாக இருக்கும்.
குழந்தைகளுக்கு சூரிய வட்டத்தில் கண், மூக்கு, வாய் வைத்து (செர்ரி அல்லது கேரட்டால்) செய்து கொடுத்தால் அந்த அழகுக்கே விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்