பேச்சுலர்ஸ் சிக்கன் வறுவல்

தேதி: March 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - ஒரு கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2 [அ] 1 பெரியது
பச்சைமிளகாய் - 3
எண்ணெய் - 100 கிராம்
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானது


 

சிக்கனை கழுவி தண்ணீரை வடித்து விட்டு எல்லாப்பொடிகளையும் சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது போட்டு பிசறி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாயை நீளமாக கீறிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகய் வதக்கி பிசறிய சிக்கனை சேர்த்து வதக்கும்போது தண்ணீர் விட்டு வரும்.
தண்ணீர் சிறிது வற்றிவரும்போது 1 கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு போட்டு மூடி வேகவிடவும். இடையில் திறந்து கிளறிவிடவும்.
தண்ணீர் முழுவதும் வற்றியதும் சுருள கிளறி சிறுதீயில் 10நிமிடம் கிளறி மசாலா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் மிளகு வறுவல்.


பேச்சுலர் வெளிநாட்டில் இருப்பவர்கள் அரைப்பதற்கு மிக்ஸி இருக்காது. அவர்கள் ஈஸியாக செய்ய இந்த குறிப்பு.

மேலும் சில குறிப்புகள்