பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்

தேதி: March 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

மட்டன் - ஒரு கிலோ
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - ஒரு கப்
எண்ணெய் - 100 கிராம்
கரம்மசாலாபொடி - ஒரு தேக்கரண்டி


 

மட்டனை கழுவி தண்ணீரை வடிய விட்டு எண்ணெய் தவிர எல்லாவற்றையும் போட்டு பிசறி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு பிசறிய மட்டனை கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும்.
மட்டனில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி மட்டன் நிறம் மாறி வரும்போது 1/2 கிளாஸ் தண்ணீர் தெளித்து கிளறி குக்கரை மூடி 10 விசில் வைத்து சிறுதீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து கிளறிகொண்டே இருக்கவும்.
மசாலா குக்கரில் ஒட்டாமல் மட்டன் தனித்தனியாக மசாலா ஒட்டி வரும்போது இறக்கவும்.


இந்த சாப்ஸ் மிகவும் சுவையானது. ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து அதில் மட்டன் துண்டுகளை மூழ்க விட்டு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டி கரண்டியில் முட்டையுடன் ஒவ்வொரு பீஸ் கறியை எடுத்து போட்டு வெந்தவுடன் திருப்பிபோட்டு வேக விட்டு எடுக்கவும். இது முட்டை மட்டன் சாப்ஸ்.

மேலும் சில குறிப்புகள்