கீரை கோப்ஃதா

தேதி: March 26, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோப்ஃதா செய்ய
-------------------------

கீரை - 1 கட்டு
பன்னிர் - 20 துண்டுகள்
கலை மாவு - 4 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
தனியா பௌடர் - 1/2 தே.க
கரம் மசாலா - 1/2 தே.க
இஞ்ஞி&பூண்டு பேஸ்ட் - 1/2 தே.க

கிரேவி செய்வதற்க்கு
----------------------------

எண்னெய் - 1/2 தே.க
சீரகம் - 1/2 தே.க
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
பூண்டு - 1 பல்
முந்திரி - 4
க்ரிம் - 4 தே.க
தண்னிர் - 1 கப்
கொத்தமல்லி இலை = அங்கரிக்க


 

பன்னிர்+பொடியாக அரிந்த கீரை(தண்னிரை வடிகட்டி) விட்டு
எல்லாம் சேர்த்து நல்ல கெட்டியாக உருண்டை வடிவில் செய்து
வைக்கவும்,
கலவையிலிருந்து சின்ன உருண்டை அளவு எடுத்து எண்ணெயில்
போட்டு நல்ல கோல்டன் கலரில் பொரித்து எடுக்கவும்.

க்ரேவி செய்யும் முறை
---------------------

நல்ல அடிபிடிக்காத கனமான பாத்திரத்தில் எண்ணெய்+நெய்
விட்டு அதில் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நல்ல
வறுக்கவும். இதில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு
நல்ல வறுக்கவும், கொஞ்சம் கோல்டன் கலரானவுடன்
அரிந்த தக்காளியும் போட்டு (பேஸ்ட்) எதுவானலும் போடலாம்,
நல்ல பச்சை வாசனை போக எண்ணெய் பிரிந்த்து வரும் போது
முந்திரியும் சேர்த்து நல்ல பிரட்டிவிட்டு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

நல்ல சூடு ஆறியபின் இதையெல்லாம் மிக்சியில் போட்டு
அரைக்கவும் கடைசியில் க்ரிம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

பானில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் அரைத்துள்ள
கிரேவியை போட்டு கொஞ்சம் தண்ணிர் விட்டு நல்ல கலந்து
மேலும் ருசிக்கு தக்க உப்பும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
இதில் 5 கோப்ஃதக்களை போட்டு மேலும் ஐந்து நிமிடம்
கொதிக்க விடவும்.
பரிமாறும் மும் மீதமிருக்கும் கோப்ஃத்தக்களை போட்டு
கலந்து போடவும்.
இதை சாதத்துடனும், ரொட்டியுடனும் சாப்பிடலாம்.


வீட்டில் செய்யும் பன்னிர் என்றால் நல்ல வறுத்து ஆறியபின் க்ரேவியில் சேர்க்கவும்.
ப்ரோசன் கீரை என்றால் நல்ல தண்ன்ர் வடித்து சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நிச்சயம் ருசியாக இருக்கும்.எம் மகனுக்கு பனீர் ரெசிப்பி எது செய்தாலும் பிடிக்கும்.செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.நான் பனீர் பாலக் அடிக்கடி பரோட்டாக்கு செய்வேன்.அது கொஞ்சம் சிம்பிள் ரெசிப்பி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உண்மையிலேயே ரொம்ப நன்றாக இருக்கும். நான் அடிக்கடி செய்வேன் கோப்தக்களை பொரித்தவுடனே காலியாகிடும். நல்ல க்ரிஸ்பி+ சாப்ட் சேர்ந்திருப்பதினால் நல்ல டேஸ்டி. செய்துபார்த்துட்டு
சொல்லுங்க ஆசியா நன்றிப்பா.

ஆசியாக்கா ஃப்ரோசென் கீரை கூட கிடைக்குதா இங்கே என்ன கீரை யூஸ் பன்னுவீங்க

எல்லா வெஜிடபிள் ஷாப்பிலும் கிடைக்கும் பாலக்கீரை கட்டு தான் நான் வாங்கி உபயோகிப்பேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.