ஆலோவேரா ஜூஸ்

தேதி: March 26, 2009

பரிமாறும் அளவு: 1 நபருக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சோற்றுக் கற்றாழை - 1 மடல்,
வெல்லம் - ஒரு எலுச்சம் பழ அளவு.


 

சோற்றுக் கற்றாழை மடலை மண் போக கழுவி, மேல் தோலை மட்டும் சீவி எடுக்கவும்.
உள்ளே ஜெல் போல இருப்பதை சிறிய துண்டாக நறுக்கவும்.
வெல்லத்தை பொடி செய்து வைக்கவும்.
நறுக்கிய கற்றாழையை மிக்ஸியில் அரைக்கவும். அரைக்க கொஞ்சம் நேரம் எடுக்கும்.
கடைசியில் வெல்லம் சேர்த்து ஒரு சுற்றி எடுக்கவும்.
ரொம்ப தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சம் திக்காகவே (சிரப் போல்) கலக்கி குடிக்கவும்.
குளிர்ச்சியாக வேண்டும் என்றால் சிறிது நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து குடிக்கவும். ஐஸ் சேர்க்க கூடாது.


காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்து வந்தால் ஒரு மாதத்திலேயே நல்ல பலன் தெரியும். ஹீமோகுளோபின் அளவு கூடும். முகம் பளபளப்பாக மாறும். உடல் சூடு குறையும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஓஹ் அப்போ ரகசியம் சிட்டுக்குருவி லேகியம் இல்லை கற்றாழை ஜூஸ் தான் ..இல்ல செல்வீ;-)

ஆஹா, செல்வி மேடம் இது உங்க குறிப்பு தானா. ரொம்ப நல்ல குறிப்பு. இங்க இந்த ஜூஸ் ரொம்ப பேமஸ். கேன் ஜூஸா கிடைக்கும்.
நான் முதன் முதலா பார்த்தப்ப அடடா எதை எதையெல்லாம் காசாக்கறாங்க பா இந்த ஊரில் என்று நினைத்தேன். ஆனா அதுல ஒன்னு பாருங்க இங்க இது விளையது இல்ல. எல்லாம் இம்போட் தான்.
ரொம்ப சிம்பிளா குடுத்து இருக்கீஙக். இந்தியா வைந்தாதான் செய்து பார்க்கனும். இங்க ஒரு மடல் 200 ரூவா. பாருங்க நம்ம ஊரில வேலியில கிடக்கும் இங்க அதுக்கு எவ்ளோ மவுசுன்னு. நான் ரெடிமேட் ஜூஸதான் வாங்குவேன். மேடம் குறிஞ்சா தேட போகயில இத பார்த்ததும், இந்த குறிப்ப செய்து பார்த்து எங்களோட பகிர்ந்துகிட்டது நன்றி மேடம்.

எங்க வீட்ல தென்னையை சுத்தி வச்சுட்டு வந்தேன். போய்தான் பார்க்கனும் இருக்கானு, இருந்தா செய்து பார்த்துட வேண்டியதுதான்.

indira

ஹாய் ரூபி,
சில ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது:-)

ஹாய் இந்திரா,
என்னக் கிண்டல் செய்பவர்கள் லிஸ்டில் நீயுமா? ஹீமோகுளோபின் ரொம்ப குரைவாக இருக்குன்னு டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்தார். பழைய வழிக்கே போவோம்னு ஆரம்பிச்சேன். குறிப்பு கொடுத்தா எல்லாருக்கும் பயனளிக்குமேன்னு கொடுத்தேன். குறிஞ்சா தேடும் போது பார்த்த கற்றாழையா?
புழக்கடை கீரை உள்ளூரில் விலை போகாதுன்னு சொல்வாங்க. நமக்கு தான் கற்றாழையின் அருமை தெரியலை. முடி வளர்வதற்கும் கற்றாழை நல்ல மருந்து.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா வெறும் ஜூஸைத்தான் குடித்தோம். வெல்லம், எலுமிச்சை போட்டு பருகியதில்லை, முயற்சித்து பார்க்கிறேன். குறிப்பு மிக அருமை :) இத்தனநாளா இதுதெரியாம போச்சேனு இருக்கு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.