காராபாத்

image

வழங்கியவர் : asiya omar

தேதி : Sat, 28/03/2009 - 11:45

ஆயத்த நேரம் : 10 நிமிடம்

சமைக்கும் நேரம் : 15 நிமிடம்

பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • ரவை - கால் கிலோ
  • வெங்காயம் - 150 கிராம்
  • தக்காளி - 100 கிராம்
  • பச்சை மிளகாய் - 2
  • மல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
  • நெய் - 1 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -1- 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - அரை டீஸ்பூன்
  • சில்லி பவுடர் -1 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு

 

  • முதலில் ரவையை மணம் வருமாறு வறுத்து எடுக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா, மிளகாய் கட் செய்து கொள்ளவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா சேர்த்து வதக்கி, வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகாய், மல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சில்லி பவுடர் சேர்த்து பிரட்டி சிறிது நேரம் கழித்து ரவைக்கு ஒன்றுக்கு 2 -3 அளவு தண்ணீர் வைத்து லேசாக கொதி வந்ததும் வறுத்த ரவை சேர்த்து கிளறி பதம் வந்தவுடன் நெய் சேர்த்து பிரட்டி இறக்கவும்.
  • சுவையான காராபாத் ரெடி. இதனை புதினா சட்னியுடன் பரிமாறலாம். காரம் பிரியப்படாதவர்கள் சில்லி பவுடரை அரைஸ்பூனாக குறைத்து கொள்ளலாம்.