வாழ்த்து அட்டை செய்முறை - 9 பாகம் - 2

தேதி: March 28, 2009

5
Average: 4.5 (4 votes)

வாழ்த்து அட்டை - 9 ல் பயன்படுத்திய அதே பொருட்களையும் டூல்களையும் உபயோகித்து மற்றொரு விதமான வாழ்த்து அட்டை செய்முறை இது. இந்த வாழ்த்து அட்டை செய்முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இங்கே செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

 

வெறும் வாழ்த்து அட்டைகள் & உறைகள்
குயில்லிங் பேப்பர்
பசை/கோந்து
நிற அட்டைகள் & கடுதாசிகள்
பெயிண்ட்

 

வண்ணத்து பூச்சி செய்வதற்கு நீர்த்துளி வடிவங்கள் பெரிது 2 & சிறிது 2, மெல்லிய இலை வடிவம் 2 செய்து கொள்ளவும். அத்தோடு பூச்சியின் உணர்கொம்புகளுக்கு ஒரு குயில்லிங் பேப்பரின் இரு முனைகளையும் உருட்டி நடுவில் மடித்து விடவும்
ஒரு முக்கோண அட்டை எடுத்து எம்போசிங்க் முறையில் பூ, மற்றும் இலைகளை வரையவும்.
வரைந்த பூ, இலைகளுக்கு வர்ணம் தீட்டி ஒரு சதுர வாழ்த்து அட்டையின் ஒரு மூலையில் வைத்து ஒட்டவும்.
பின்னர் வாழ்த்து அட்டையின் மறு மூலையில் வண்ணத்துப் பூச்சியை ஒழுங்குப்படுத்தி ஒட்டவும். இதற்கு நடுவில் மெல்லிய இலை வடிவ ரோல்களை வைத்து ஒட்டி கரைகளில் பெரிய மற்றும் சிறிய நீர்த்துளி ரோல்களை வைத்து இறக்கைகள் போல ஒட்டவும். பின்னர் உணர்கொம்பை வைத்து ஒட்டவும்.
பின்னர் மேற்பக்க மூலையில் கிளிட்டர் க்ளூ அல்லது பேனாவால் அலங்காரமாக கோடுகள் வரைந்து விரும்பிய வாழ்த்து வாசகத்தை பொறிக்கவும். இலகுவான அழகான வாழ்த்து அட்டை தயார்.
இவ்வாறு உங்கள் கற்பனைகேற்ப பேப்பர் ரோல்களை வளைத்தும் மடித்தும் விரும்பிய வடிவங்களில் வாழ்த்து அட்டைகள் செய்து கொள்லலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நர்மதா மேடம் இரண்டுமே அழகாக இருக்கிறது. நான் ஒரு 5 வருடங்களுக்கு முன் மயில் இந்த முறையில் செய்திருக்கிறேன்[என் தம்பியின் craft book-ஐ பார்த்து :-)]

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹெல்லோ நர்மதா குயில்லிங் பேப்பர் என்றால் என்ன? எனக்கு தெரியவில்லை கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன். உங்க அனைத்து கைவினைப்பொருட்களும் ரொம்ப நல்லா இருக்கிறது. நீங்கள் இது பற்றி கற்றுக்கொண்டீர்களா? உங்க சொந்த கற்பனையா? தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அனைத்தும் மிக அருமை.

நன்றி
உமா

இதற்கு முன்னர் நர்மதா மேடமே(வாழ்த்து அட்டை செய்முறை - 9) quilling பற்றியும், தேவையான சாமான்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.

அல்லது Quilling என்று கூகுளில் தேடுங்கள்.பல websites வரும்+ youtube videos நிறைய இருக்கிறது.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta