பேச்சுலர்ஸ் மட்டன் சுக்கா

தேதி: March 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

மட்டன் - ஒரு கிலோ
மிளகாய்ப்பொடி - 2 மேசைக்கரண்டி
மல்லிப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலாபொடி - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - ஒரு மேசைக்கரண்டி [தேவையென்றால் சேர்க்கவும்}].


 

கறியை கழுவி தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் மிளகாய்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, கரம்மசாலாபொடி போட்டு பிசறி, பொடியாக நறுக்கிய 100 கிராம் வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய், உப்பு போட்டு கிளறி[தண்ணீர் விடாமல்] குக்கரை மூடி 10 விசில் குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மீதி வெங்காயம் வதக்கி, குக்கரில் பிரஷர் போனதும் திறந்து கொட்டவும்.
கறி தண்ணீர் விட்டுதான் இருக்கும். சிறிது நேரம் கிளறினால் தண்ணீர் வற்றிவிடும்.
தண்ணீர் வற்றியவுடன் மிளகுத்தூள் போட்டு சிறுதீயில் கிளறவும். 10 நிமிடம் கிளறினால் சுவையான சுக்கா வறுவல் தயார்.


இது செய்வது ஈஸி. பேச்சுலர்ஸ் மட்டன் சுக்கா செய்து வெற்றி பெறுங்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செய்ய ஈஸியாதான் தெரியுது ;)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்