மொச்சைக் குழம்பு. | arusuvai


மொச்சைக் குழம்பு.

food image
வழங்கியவர் : mythilibabu
தேதி : திங்கள், 30/03/2009 - 18:08
ஆயத்த நேரம் : 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20-25நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு

 

 • மொச்சை - அரை கப்
 • சின்ன வெங்காயம் - அரை கப்
 • பூண்டு - அரை கப்
 • புளி - எலுமிச்சை அளவு
 • மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
 • தனியாதூள் - ஒரு தேக்கரண்டி
 • சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 • உப்பு தேவையான அளவு
 • தாளிக்க:
 • கடுகு - அரை தேக்கரண்டி
 • வெந்தயம் - அரை தேக்கரண்டி
 • சீரகம் - கால் தேக்கரண்டி
 • எண்ணெய் - கால் கப்
 • அரைக்க:
 • மல்லித்தழை, கருவேப்பிலை - சிறிதளவு
 • தக்காளி - 4

 

 • மொச்சை 6 முதல் 8 மணிநேரம் ஊறவிடுங்கள்.
 • பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து வையுங்கள்.
 • புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.
 • தக்காளி,மல்லித்தழை, கருவேப்பிலை, மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
 • மொச்சையை உப்பு சேர்த்து நன்கு வேகவையுங்கள்.
 • எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பூண்டு சேருங்கள்.
 • இது நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கி மிளகாய்தூள்,தனியாதூள்,சீரகத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி
 • புளி, உப்பு, மொச்சை சேர்த்து நன்கு பச்சைவாசனை போக கொதிக்க விட்டு இறக்குங்கள். இதோ சுவையான மொச்சைக் குழம்பு ரெடி.

மைதிலி,

மைதிலி,
உங்க மொச்சை குழம்பு செய்தேன்.தக்காளி,கொத்தமல்லி,கறிவேப்பிலை அரைத்து செய்தது வித்தியாசமான சுவையில் இருந்தது. நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

மைதிலி

இன்று உங்களின் மொச்சை குழம்பு செய்தேன் நன்றாக இருந்தது.

அன்புடன்
மகேஸ்வரி