சிக்கன் காய்கறி ஸ்பைசி சூப்

தேதி: March 30, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 250 கிராம்,
கேரட் - 2,
பீன்ஸ் - 5,
காளி ப்ளவர் - சிறிது,
கோஸ் - சிறிது,
உருளைகிழங்கு - 2 (சிறியது),
வெங்காயம் - 1,
சீரக பொடி - 1/2 தேக்கரண்டி,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
பால் - 1 கப்,
கார்ன் ஃப்ளார் - 3 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ப்ரிஞ்சி இலை - சிறிது,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

சிக்கனையும் எல்லா காய்கறிகளையும் சிறியதாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை-கிராம்பு-ப்ரிஞ்சி தாளித்து, சிக்கன் சேர்த்து வதக்கவும்.
எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கி, 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி 5,6 விசில் விடவும்.
சூடு அடங்கியதும் திறந்து, பாலில் கார்ன் ஃப்ளாரை கரைத்து ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கி, உப்பு-மிளகு தூள் தூவி பரிமாறவும்.


மசாலா வாசனையோட சுவையான சூப் ரெடி. மழைக்காலத்திற்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்