மைக்ரோ அவனில் காலிஃப்ளவர் ஃப்ரை

தேதி: March 30, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காலிஃப்ளவர் - 1 (சுமாராக),
பெரிய வெங்காயம் - அரை,
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி,
தனியாத்தூள் - கால் தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி.


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை 5 நிமிடம் வெந்நீரில் போட்டு எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு மைக்ரோ அவன் பாத்திரத்தில் பாதி எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து முழு சூட்டில் இரண்டு நிமிடம் வைக்கவும்.
பிறகு நறுக்கிய காலிஃப்ளவர், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கலக்கி ஒரு கை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.
பிறகு எடுத்து மீதி எண்ணெயை சேர்த்து கலக்கி 5 நிமிடம் வைக்கவும்.
எடுத்து ஒரு முறை கலக்கி விட்டு மேலும் இரு நிமிடம் வைத்து எடுக்கவும்.
லேசான மொறுமொறுப்புடன் சுவையான காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி.


ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். மொறுமொறுப்பு பிடிக்காதவர்கள் கடைசி இரு நிமிடங்கள் வைக்காமல் விடலாம். சூடு ஓவனைப் பொறுத்து மாறுபடும்.

மேலும் சில குறிப்புகள்