மைக்ரோ அவனில் காலிஃப்ளவர்-பட்டாணி மசாலா

தேதி: March 30, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

காலிஃப்ளவர் - 1 (சுமாராக),
பச்சை பட்டாணி - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 3,
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி,
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி,
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
முந்திரி - 6,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 3 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

காலிஃப்ளவரை 5 நிமிடம் வெந்நீரில் போட்டு எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியையும் வெங்காயத்தையும் சுமாராக நறுக்கி வைக்கவும்.
மைக்ரோ அவன் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம், முந்திரி சேர்த்து இரண்டு நிமிடம் வைக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வைக்கவும்.
தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கி இரண்டு நிமிடம் வைத்து எடுத்து, ஆறியவுடன் நைசாக அரைக்கவும்.
மைக்ரோ அவன் பெரிய பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு நறுக்கிய காலிஃப்ளவர், உரித்த பட்டாணி சேர்த்து கலக்கி மூடி இரண்டு நிமிடம் வைக்கவும்.
பிறகு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி 5 நிமிடம் வைக்கவும்.
பிறகு அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி 7 நிமிடம் வைக்கவும். இடையிடையே கலக்கி வைக்கவும்.
மசாலா திக்காக வேண்டுமானால் மேலும் ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கலாம்.


பரோட்டா, சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi madam.... ur dish was really superb... yesterday i tried n i liked it very much... thanks for tat

ஹாய் சூர்யா,
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.