வாழையிலை பேக்ட் மீன்

தேதி: March 30, 2009

பரிமாறும் அளவு: 10 துண்டுகள்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

(அதிகம் முள்ளில்லாத) மீன் - 10 துண்டு,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
மிளகு தூள் - அரை தேக்கரண்டி,
தேங்காய் - அரை மூடி,
கொத்தமல்லி தழை - ஒரு சிறிய கட்டு,
புதினா - அரை கட்டு,
பச்சை மிளகாய் - 1,
பூண்டு - 4 பல்,
எழுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
வாழை இலை - 1,
உப்பு - தேவையான அளவு.


 

மீனை சுத்தம் செய்து, எழுமிச்சை சாறு, மிளகாய் தூள், எண்ணெய், உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை ஊற வைத்த மீனுடன் சேர்த்து, பிரட்டி, அரை மணிநேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
வாழை இலையை 10 சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
நறுக்கிய இலையில் ஒவ்வொரு மீன் துண்டாக வைத்து நன்றாக சுருட்டவும்.
சுருட்டிய மீன்களை மைக்ரோ அவன் தட்டில் அடுக்கி, முழு சூட்டில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.
ஆறியதும் வாழை இலையை அகற்றி விட்டு, மீனை பரிமாறவும்.
வாழை இலை மணத்துடன் சுவையான மீன் தயார்.


மைக்ரோ அவன் இல்லாவிடில் இட்லி பானையிலும் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்